ரகசியமா பண்ணதை.. ஊரறிய இப்படி உளறிட்டிங்களே ஷாக் ஆன ஊர்வசி..!
தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக தனது வாழ்க்கையை தொடங்கிய ஊர்வசி இன்னும் அனைத்து மொழிகளிலும் முக்கியமான கதாபாத்திரங்களில் பிசியாக நடித்த வருகிறார். இந்நிலையில் அந்தகன் படத்தின் பிரமோஷன் பட நிகழ்ச்சியில் பேசிய ஊர்வசி இந்த படம் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு சிறப்பான திரைப்படம்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெறும் என்றார். மேலும், அந்ததன் படத்தில் நான் நடிக்க ஒப்புக்கொண்ட பின்னர், ஷூட்டிங் துவங்கிய ஐந்தாவது நாள் எதிர்பாராத விதமாக என் மாமியார் தவறிவிட்டார். எனவே இது குறித்து நான் தியாகராஜன் சாரிடம் சொன்னேன். அவர் உங்கள் பணிகளை முடித்துவிட்டு நீங்கள் வந்தால் போதும் என கூறினார். மேலும், சம்பளம் நான் கேட்டதை விட அதிகம் கொடுத்தார். இது குறித்து என்னுடைய கணவரிடம் பேசிய பின்னரே திருப்பிக் கொடுத்தேன். நான் ரகசியமாக செய்ததை அவர் இப்படி வெட்ட வெளியில் போட்டு உடைப்பார் என தெரிந்திருந்தால் ஒரு பிரஸ்மீட் வைத்தே கொடுத்து இருப்பேன் என ஊர்வசி கூற அரங்கமே சிரிப்படையில் மூழ்கியது.