Viral Video: 'அது ஒரு கெட்ட கனவு.. ஏமாத்தீட்டாங்க' புகார் சொன்ன நடிகை ஷீலா.. அப்போ அப்டி பேசுனீங்க.. இப்போ இப்டியா ?

Actress sheela rajkumar opens up about draupathi movie video getting viral

முறையாக பரதநாட்டியம் கலையை பயின்ற ஷீலா ராஜ்குமார், சென்னையில் உள்ள கூத்து பட்டறை ஒன்றில் சேர்ந்து பணியாற்றி வந்தார். பின்னர், கலைஞர் தொலைக்காட்சியில் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் சிறு சிறு குறும்படங்களில் நடித்து வந்தார். இதன் மூலம், இவருக்கு, ஆறாது சினம் படத்தில் சிறு வாய்ப்பு கிடைத்தது.

Actress sheela rajkumar opens up about draupathi movie video getting viral

இதனைத் தொடர்ந்து, டூலெட் திரைப்படத்தில் நடித்தார். இப்படத்திற்காக பல விருதுகளை பெற்றார். பின்னர், ஜீ தமிழில் அழகிய தமிழ் மகள் என்னும் தொடரில் நடித்தார். அசுரவதம், நம்ம வீட்டு பிள்ளை, மலையாளத்தில் கும்பலங்கி நைட்ஸ், திரௌபதி, மண்டேலா என அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்தார்.

Actress sheela rajkumar opens up about draupathi movie video getting viral

சில யூடியூப் வெப் சீரீஸ், குறும்படங்களில் நடித்துள்ளார். தற்போது, திரௌபதி திரைப்படம் குறித்து ஷீலா பேசிய வீடியோ ஒன்று செம வைரலாகி வருகிறது. இயக்குனர் மோகன் இயக்கத்தில் ஷீலா, ரிச்சர்ட் உள்ளிட்டோர் நடிப்பில் ஜாதி மதம் குறித்து திரைக்கதையில் எடுக்கப்பட்டு வெளியான திரைப்படம் திரௌபதி.

Actress sheela rajkumar opens up about draupathi movie video getting viral

அந்த வீடியோவில், திரௌபதி படத்தில் வருகிறது. கெட்ட கனவாக இருக்கிறது. முழு கதையும் என்னிடம் சொல்லப்படவில்லை. இயக்குனர்கள் வெளிப்படையாக இருந்தால் நல்லது. இதையெல்லாம் எதிர்கொள்வதற்கு நானும் தயாராக இருப்பேன். என்னுடைய வேலையை என்னிடம் தெளிவாகக் கூறினால் அதை வேலையை செய்யலாமா ? வேண்டாமா? என்ற முடிவை நான் எடுப்பேன் என பேசியுள்ளார்.

Actress sheela rajkumar opens up about draupathi movie video getting viral

ஷீலா ராஜ்குமார் இப்படி பேசியதும் மோகன் ஜி ரசிகர்கள் சண்டைக்கே வந்து விட்டனர். திரெளபதி படம் வெளியாவதற்கு முன்னதாக இதே ஷீலா ராஜ்குமார் அந்த படத்திற்கான புரமோஷன் வீடியோவில், இயக்குநர் கதை சொல்லும் போது பெண்களுக்கான வலிமையான கதையாக இருந்தது. இந்த படத்தை நிச்சயம் அப்பாக்கள் பெண் பிள்ளைகளுடன் வந்து தியேட்டரில் பார்க்கலாம் என அளந்து விட்டு இருந்ததை அதே வீடியோவுக்கு கீழ் எடுத்துப் போட்டு விளாசி வருகின்றனர்.

Actress sheela rajkumar opens up about draupathi movie video getting viral

இப்படி இவர் பேசிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து முழு கதையை கூறாமல் ஏமாற்றி நடிகையை நடிக்க வைத்து விட்டாராம் மோகன் ஜி என்ற கேள்வி எழுப்பி வருகின்றனர் ரசிகர்கள்.

Actress sheela rajkumar opens up about draupathi movie video getting viral

புதிய படத்துக்கான புரமோஷனுக்காக பழைய படத்தை மட்டம் தட்டிப் பேசுவது இப்போ எல்லாம் நடிகைகளுக்கு ஃபேஷன் ஆகி விட்டது என ரசிகர்கள் திட்டி வருகின்றனர். படம் வெளியாகும் முன்னதாக அந்த நடிகைக்கு எதுவும் தெரிந்திருக்காது என்றும் தற்போது அதன் பின் விளைவுகள் தெரிந்த பிறகு இப்படி பேசுகிறார் என்றும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

Share this post