'என்னைப் பொறுத்தவரை என் அம்மா தப்பானவர்' நடிகை சங்கீதா பரபரப்பு பேட்டி.. காரணம் இதோ !

actress sangeetha krish claims her mother to be bad interview getting viral

தமிழ் சினிமாவில் பாலா இயக்கத்தில் வெளியான பிதாமகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை சங்கீதா. இதற்கு முன்பே பல பிரபல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

actress sangeetha krish claims her mother to be bad interview getting viral

பாடகர் கிரிஷ் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. தற்போது தளபதி விஜய் நடிக்கும் வாரிசு படத்தில் நடித்து வரும் இவர், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவர்களில் ஒருவராக பங்கேற்று வருகிறார்.

actress sangeetha krish claims her mother to be bad interview getting viral

தற்போது, இவர் அளித்த பேட்டி வீடியோ ஒன்று செம வைரலாகி வருகிறது. இவர் அளித்த பேட்டி ஒன்றில் தன்னுடைய அம்மா தன்னை 14 வயதிலேயே நடிக்க அனுப்பி வைத்துவிட்டார். அண்ணன்கள் குடிகாரர்கள், அம்மா எந்த கவலையும் இல்லாமல் ஊதாரித்தனமாக செலவு செய்பவர். குடும்ப பாரம் மொத்தத்தையும் என்மீது இறக்கி வைத்து விட்டார்கள். என்னைப் பொறுத்தவரை என் அம்மா தப்பானவர் என பேசி உள்ளார் நடிகை சங்கீதா. இவருடைய இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

actress sangeetha krish claims her mother to be bad interview getting viral

Share this post