திடீரென ட்விட்டரில் இருந்து வெளியேறுவதாக அறிவித்த பிரபல தமிழ் பட நடிகை !
படிப்பில் முக்கியத்துவம் கொடுத்து படித்து வந்த ராஷி கண்ணா, மாடலிங் அல்லது நடிகை ஆவது விருப்பம் இல்லையாம். விளம்பர திரைப்படங்களுக்கு கதை மற்றும் ஸ்க்ரிப்ட் எழுதி வரும் வேலையை செய்து வந்தார்.
இதன் மூலம் திரைப்பட வாய்ப்புகள் இவருக்கு வர தொடங்கின. ஹிந்தி மொழி திரைப்படத்தில் நடிப்பதன் மூலம் திரையுலகில் அறிமுகமான ராஷி கண்ணா, மெட்ராஸ் கஃபே திரைப்படத்தில் நடித்தார்.
அதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்து தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். பின்னர், மலையாள மொழி திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய இவர், இமைக்க நொடிகள் திரைப்படத்தில் அதர்வா ஜோடியாக நடித்தார்.
பின்னர், அடங்க மறு, அயோக்கியா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை 3 போன்ற திரைப்படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழி திரைப்படங்களில் நடித்தார்.
திரைப்படங்கள் மட்டுமல்லாது வெப் சீரீஸ்களிலும் நடித்து வரும் ராஷி கண்ணா, தற்போது அடுத்தடுத்து சில திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.
தற்போது தனது ஹாட் புகைப்படங்களை செம கவர்ச்சி போஸ் கொடுத்து அதனை இணையத்தளத்தில் பதிவிட்டு வருகிறார். தனுஷ் நடிப்பில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் இவரது நடிப்பு கவனத்தை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், திடீரென அவர் ட்விட்டரில் இருந்து வெளியேறுவதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். இருப்பினும் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து உங்களுடன் இருப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் அவரது டுவிட்டர் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ட்விட்டரில் ராஷிகண்ணா மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருவதால் அவர் ட்விட்டரில் இருந்து வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது.