ஜாக்கெட் போடல… வெறும் கோவணம் தான் - தங்கலான் பட நடிகை ஷாக்கிங் பேட்டி
வித்தியாசமான கதை களத்தில் திரைப்படங்களை இயக்கி மாபெரும் வெற்றி கொடுப்பவர் தான் இயக்குனர் பா ரஞ்சித். இவரது இயக்கத்தில் அதிரடியான நாடகத் திரைப்படமாக உருவாகி வரும் படம் தான் “தங்கலான்” இந்த திரைப்படத்தில். விக்ரம் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக மாளவிகா மாளவிகா மோகனன் நடிக்கிறார்.
இவர்களுடன் பார்வதி மேனன், பசுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். நடிகர் விக்ரமின் 61வதுதிரைப்படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். ரூ. 150 கோடி பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த திரைப்படம். வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகியுள்ளது.
இந்நிலையை படத்தின் ப்ரோமோஷன்களில் பட குழு தீவிரம் காட்டி வருகின்றன. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருப்பவர் தான் நடிகை ப்ரீத்தி கரன். “நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ப்ரீத்தி கரன் தங்கலான் திரைப்படத்தில் நடித்த அனுபவத்தை குறித்து பகிர்ந்து கொண்டார்.
அப்போது தன்னுடைய கேரக்டர் குறித்து பேசி அவர்… தங்கலான் படத்தில் முழுக்க முழுக்க நான் ஜாக்கெட் இல்லாமலே தான் நடித்திருக்கிறேன். நான் மட்டும் இல்லை என்னை போனன்றே பல பெண்கள் நடித்திருக்கிறார்கள்.
அத்துடன் ஆண்கள் வெறும் கோவணம் மட்டும்தான் கட்டிக்கொண்டு நடித்திருக்கிறார்கள். எனவே இந்த படம் வித்தியாசமான கதைக்களத்தில் நிச்சயம் உங்களை கவரும் என தெரிவித்தார்.