பிரபல நடிகை பூர்ணா திருமணம்.. மாப்பிள்ளை இவரா? வைரலாகும் போட்டோஸ் !
கேரளத்து பெண்ணான நடிகை பூர்ணாவின் இயற்பெயர் ஷாம்னா காசிம். மாடலிங், நடிகை மற்றும் நடன கலைஞரான இவர், அம்ரிதா டிவியில் பங்கேற்ற ஒரு நடன நிகழ்ச்சி மூலம் திரைப்பட வாய்ப்பை பெற்றவர். 2004ம் ஆண்டு, மஞ்சு போலொரு பெண்குட்டி என்னும் மலையாள மொழி திரைப்படம் மூலம் நடிப்புத் துறைக்கு அறிமுகமானவர்.
இதனைத் தொடர்ந்து, தெலுங்கில் ஸ்ரீ மஹாலக்ஷ்மி என்னும் படத்தில் கதாநாயகியாக நடித்தார். தமிழில், பரத் உடன் முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட என அனைத்து தென்னிந்திய மொழி திரைப்படங்களிலும் நடிக்கத் தொடங்கிய இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு.
தமிழில் கந்தக்கோட்டை, கொடைக்கானல், துரோகி, ஆடு புலி, வேலூர் மாவட்டம், கொடிவீரன், அடங்கமறு உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தற்போது, இறுதியாக, முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தழுவி AL விஜய் இயக்கத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியான ‘தலைவி’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், படம் பேசும், பிசாசு 2, அம்மாயி, விசித்திரம் உள்ளிட்ட தமிழ் படங்களிலும், ஒரு சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இதில் ஒரு சில படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கிறது. திரைப்படங்கள் மட்டுமல்லாது அவ்வப்போது தொலைக்காட்சி டான்ஸ் நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார். ஸ்ரீதேவி டிராமா என்ற கம்பெனி நடத்தும் ரியாலிட்டி ஷோவில் நடுவராக இருந்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை பூர்ணா தற்போது தனது திருமண புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சானித் ஆசிப் அலி எனும் தொழில் அதிபரை இஸ்லாமிய முறைப்படி கல்யாணம் செய்துள்ளார். திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து “சிறப்பு, நான் உலகின் மிக அழகான பெண்ணாக இல்லாமல் இருக்கலாம், அல்லது ஒரு நல்ல வாழ்க்கைத் துணையின் அனைத்து குணநலன்களையும் பெறாமல் இருக்கலாம், ஆனால் நீங்கள் ஒருபோதும் என்னைக் குறைவாக உணரவில்லை.
நான் யார் என்பதற்காக நீங்கள் என்னை நேசித்தீர்கள், என்னை மாற்ற முயற்சிக்கவில்லை. என்னில் உள்ள சிறந்ததை வெளிக்கொணர நானே உழைக்க என்னை ஊக்கப்படுத்தினீர். இன்று, நம் நெருங்கிய சொந்தங்களுக்கு மத்தியில் நீங்களும் நானும் இந்த அற்புதமான ஒற்றுமை பயணத்தைத் தொடங்குகிறோம். இது கொஞ்சம் அதிகம் என்று எனக்குத் தெரியும், இன்ப துன்பத்தில் உங்களுடன் இருப்பேன் என்றும் எப்போதும் உங்கள் அன்புக்கு ஆதரவளிப்பதாகவும் உறுதியளிக்கிறேன். ❤️” என பூர்ணா திருமணம் குறித்து பதிவிட்டுள்ளார்.