என்ன தான் ஆச்சு நிவேதா தாமஸ்ஸுக்கு ? லேட்டஸ்ட் போட்டோக்களால் ஷாக்கான ரசிகர்கள்
குழந்தை நட்சத்திரமாக சன் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த 90ஸ் பேவரைட் தொடரான மை டியர் பூதம் சீரியல் மூலம் நடிக்கத் தொடங்கியவர் நடிகை நிவேதா தாமஸ்.
குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கிய இவர், மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் அதிகம் நடித்துள்ளார். தமிழில், குருவி திரைப்படத்தில் தங்கையாக நடித்த நிவேதா, நிறைய மலையாள மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
பின்னர், போராளி, நவீன சரஸ்வதி சபதம் உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாநாயகியாக நடித்தார். அதனைத் தொடர்ந்து, ஜில்லா படத்தில் மோகன் லால் மகளாகவும், விஜய் தங்கையாக நடித்தார்.
பாபநாசம் மற்றும் தர்பார் திரைப்படங்களில் முக்கிய முன்னணி பிரபலங்கள் கமல் ஹாசன் மற்றும் ரஜினி அவர்களின் மகளாக நடித்தார். தெலுங்கு மொழியிலும் அதிக திரைப்படங்களில் நடித்து வரும் நிவேதா தாமஸ், தொலைக்காட்சி சீரியல் தொடர்களில் அதிகம் நடித்துள்ளார்.
இவர், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ், சன்ஸ்க்ரிட், பிரென்ச், ஸ்பானிஷ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகள் பேசக்கூடிய திறமை கொண்டவர். தற்போது, அடுத்தடுத்து திரைப்படங்களில் கமிட் ஆகி வரும் இவர், தனது ஹாட் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.
தற்போது இவர் தெலுங்கில் ஷாகினி டாகினி என்ற ஆப்ஷன் காமெடி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவரும் ரெஜினாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இப்படி ஒரு நிலையில் நிவேதா தாமஸ் மற்றும் ரெஜினா இருவரும் தெலுங்கில் ஒரு டிவி நிகழ்ச்சிக்கு சென்று இருந்தனர்.
அந்த நிகழ்ச்சியில் ப்ரோமோ ஒன்று சமீபத்தில் வெளியாகி இருந்தது. அதில் அவரைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குண்டாகி போன அவரை பார்த்து, ‘அட நம்ம நிவேதா தாமசா இது?’ என்று பெருமூச்சு விடுகிறார்கள். ஒருவேளை ஏதாவது புதிய படத்துக்காக உடல் எடை கூடியிருக்கிறாரா? என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். நிவேதா தாமஸ் எதற்காக இப்படி குண்டாக மாறி போயிருக்கிறார்? என்பது குறித்து பெரிய விவாதமே நடந்து வருகிறது.