அழகே அழகில் மயங்கிவிடும் இவளைக் கண்டால்.. நயன்தாராவின் Ultimate லுக்!

actress-nayanthara-femi9-ad-saree-click-photos-060724

பத்து ஆண்டுகளுக்கு மேல் தனது சினிமா மார்க்கெட்டை நிலை நிறுத்தி முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் ஐயா படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவருக்கு, முதல் படமே அமோக வரவேற்பை கொடுத்தது. சந்திரமுகி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து அசத்தலான நடிப்பையும் கவர்ச்சியும் வெளிக்காட்டி ரசிகர்களை கவர்ந்தார். என்னதான் நயன்தாரா தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்தாலும், ஜவான் படத்திற்கு பின்னர் தான் அவருடைய ரேஞ்சே வேற லெவலுக்கு சென்று விட்டது என்று சொல்லலாம். அவருக்கு பல பட வாய்ப்புகளும் தேடி வருகின்றதாம்.

actress-nayanthara-femi9-ad-saree-click-photos-060724

இதுவரை 75 படங்களில் நடித்திருக்கும் நயன்தாரா தற்போது, மண்ணாங்கட்டி என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். தற்போது, இந்தியாவில் நயன்தாராவுக்கு பல பட வாய்ப்புகள் தேடி வருகின்றன. திரையுலக நட்சத்திரங்கள் பலரும் போயஸ் கார்டனில் சொகுசு வீடுகள் வைத்துள்ளனர் என்பதை அனைவரும் அறிவோம். அந்த வகையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனுஷ் என பலருக்கும் அங்கு தான் வீடு இருக்கிறது. இவர்களை தொடர்ந்து, போயஸ் கார்டனில் பிரம்மாண்ட வீடு ஒன்றை சமீபத்தில் நயன்தாரா வாங்கி இருந்தார். தனது, போயஸ் கார்டன் வீட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாரா பதிவு செய்திருந்தார். தற்போது, Femi9 நாப்கினை விளம்பரம் செய்து ஒரு பதிவினை போட்டுள்ளார். அதில், அழகிய சேலையில் மயக்கும் நயன்தாராவை பார்த்து ரசிகர்கள் மயங்கி கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Share this post