அஜித் பிறந்தநாள் மே 7ம் தேதி தான்.. பிரபல தமிழ் பட நடிகை Viral பதிவு.. இவ்ளோ பேர் சொல்றாங்க.. உண்மை தானா ?

Actress meera chopra wishes ajith birthday may 7 and fans says new information

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர்களில் அஜித் ஒருவர். இவர் நடிப்பில் திரைப்படம் பற்றிய தகவல் வெளியானாலே ஒரே கொண்டாட்டமாக சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் செய்து ரசிகர்கள் மாஸ் காட்டி விடுவார்கள். தனக்கென ரசிகர் படையை கொண்டுள்ள அஜித், அடுத்தடுத்து தற்போது திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

Actress meera chopra wishes ajith birthday may 7 and fans says new information

விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை திரைப்படங்கள் 2019ம் ஆண்டு வெளியான பிறகு, 3 வருட காத்திருப்பிற்கு பின்னர் ரிலீஸ் ஆன திரைப்படம் வலிமை. வினோத் மற்றும் போனி கபூர் கூட்டணியில் அஜித் நடித்து வெளியான திரைப்படம் வலிமை. பைக் ரேஸ், நகை கொள்ளை, போதை பொருள் குறித்து வெளியான இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

Actress meera chopra wishes ajith birthday may 7 and fans says new information

இப்படத்தை தொடர்ந்து, மீண்டும் போனி கபூர் - வினோத் -அஜித் கூட்டணியில் AK61 திரைப்படம் உருவாவது பற்றிய அறிவிப்பு வெளியானது. இதில் கதாநாயகியாக மஞ்சு வாரியார் நடிப்பதாக தகவல்கள் உலா வருகிறது. மேலும், AK62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக தகவல் வெளியானது.

Actress meera chopra wishes ajith birthday may 7 and fans says new information

கடந்த மே 1ம் தேதி உழைப்பாளர்கள் தினத்தன்று அஜித் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதற்கு பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும், சமூக வலைதளத்தில் அஜித் குறித்த ஹேஷ் டேக்கள் ட்ரெண்ட் ஆனது.

Actress meera chopra wishes ajith birthday may 7 and fans says new information

இப்படி இருக்க மே 7ம் தேதி அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் மீரா சோப்ரா. இவர் 2005ம் ஆண்டு, தமிழில் வெளியான எஸ்.ஜே. சூர்யா இயக்கி நடித்த அன்பே அருயிரே படத்தில் கதாநாயகியாக நடித்தவர் மீரா சோப்ரா.

Actress meera chopra wishes ajith birthday may 7 and fans says new information

அன்பே ஆருயிரே திரைப்படத்தை தொடர்ந்து, ஜாம்பவான், லீ, மருதமலை, காளை, ஜகன்மோகினி போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது திரையுலகில் அதிகம் பேசப்படதா இவர், சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் மே 7ம் தேதி அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ரசிகர்களை ஷாக் செய்துள்ளார்.

Actress meera chopra wishes ajith birthday may 7 and fans says new information

இதை பார்த்த அஜித் ரசிகர்கள் பலரும் கேலி செய்ய துவங்கிவிட்டனர். ஆனால், ஒரு சிலரோ அஜித்தின் பிறந்தநாள் மே 7 தான் என்று கூறி வருகின்றனர்.

Actress meera chopra wishes ajith birthday may 7 and fans says new information

அது போக மே 7 அஜித் பிறந்தநாள் என்று அஜித் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்களை கூட பதிவிட்டு வருகின்றனர். மேலும், ‘அஜித்தின் உண்மையான பிறந்தநாள் மே 7 தான், காதல் கோட்டை பட வெற்றிக்கு பின்னர் தனது பிறந்தநாளை அனைவரும் கொண்டாட வேண்டும் என பப்ளிசிட்டிக்காக தொழிலாளர்கள் தினமான மே 1 என தனது பிறந்தநாளை மாற்றி திருத்திக்கொண்டார்’ என ரசிகர் ஒருவர் பதிவிட்டு இருக்கிறார்.

Actress meera chopra wishes ajith birthday may 7 and fans says new information

Share this post