"முதல் தடவ பொறாமைப்படுறேன்".. பொன்னியின் செல்வன் 'நந்தினி' ரோல் குறித்து மீனாவின் வைரல் பதிவு !!
1982ம் ஆண்டு சிவாஜி கணேசனின் நெஞ்சங்கள் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனா 90ஸ்களில் நம்பர் ஒன் கதாநாயகியாக வலம் வந்தார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அடுத்தடுத்து ரஜினி, கமல், கார்த்தி என டாப் ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்ததன் மூலம் 90ஸ்களின் கனவு கன்னியாக இருந்து வந்தவர் நடிகை மீனா.
அதன் பின்னர், பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த இவர், பெங்களூரைச் சேர்ந்த வித்யாசாகருக்கும் நடிகை மீனாவுக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அதன் பின்னர், குடும்பம் குழந்தை என ஆன பிறகு குணச்சித்திர வேடங்களை ஏற்று நடிக்கத் தொடங்கினார். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து வந்தார்.
தற்போது, இவரது மகள் நைனிகா விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். இந்நிலையில், நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
28.06.2022 இரவு 9.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தாலும், நுரையீரல் தானம் கிடைப்பதில் தாமதம் ஆனதே அவரது இறப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது. அவரது திடீர் மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
மீனா விரைவில் இந்த துக்கத்தில் இருந்து மீண்டு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் ஆறுதல் கூறி வந்தனர். கணவர் வித்யாசாகர் உயிர் இழந்து சில மாதங்கள் ஆன நிலையில், தற்போது மீனா அந்த துயரத்திலிருந்து மீண்டு தனது தோழிகளுடன் நேரம் செலவிட்டு வருகிறார். இது சம்மந்தமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியான வண்ணம் உள்ளது.
இந்நிலையில், தற்போது பொன்னியின் செல்வன் படம் தொடர்பாக மீனா பகிர்ந்துள்ள இன்ஸ்டா பதிவு ஒன்று அதிகம் வைரலாகி வருகிறது. பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு, அதே பெயரில் இரண்டு பாகங்களாக திரைப்படம் இயக்கி வருகிறார் இயக்குனர் மணிரத்னம். இதன் முதல் பாகமான பொன்னியின் செல்வன் 1, இன்று (30.09.2022) உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.
சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், பிரபு, ஜெயராம், விக்ரம் பிரபு, கிஷோர், லால், ரஹ்மான், ஷோபிதா துலிபாலா உள்ளிட்ட பல நட்சத்திர பிரபலங்கள் நடித்துள்ளனர்.
பல ஆண்டுகளாக பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுக்க வேண்டும் என ஏரளமான திரை பிரபலங்கள் கனவு கண்ட நிலையில், அதனை மணிரத்னம் சாதித்துக் காட்டி உள்ளார். மேலும், இந்த படத்தின் ட்ரைலர், பாடல்கள் உள்ளிட்ட அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இன்று திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதனிடையே, பொன்னியின் செல்வன் படத்தில் வரும் ஐஸ்வர்யா ராயின் நந்தினி கதாபாத்திரம் குறித்து இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்த நடிகை மீனா, “இதற்கு மேல் இதனை நான் மூடி வைக்க முடியாது. அது என்னை திணறடிக்கிறது. எனது வாழ்க்கையில் முதல் முறையாக ஒருவரை பார்த்து பொறாமைப்படுகிறேன் என குறிப்பிட்டு, ஐஸ்வர்யா ராயை டேக் செய்து, தனது கனவு கதாபாத்திரமான நந்தினியில் நடிக்க ஐஸ்வர்யா ராய்க்கு வாய்ப்பு கிடைத்தது தான் இதற்கு காரணம்” என்று ஜாலியாக மீனா தெரிவித்து படக்குழுவை பாராட்டி வாழ்த்தியுள்ளார்.