Viral Video: 'நயன் மேம் னால அதே மாதிரி மஹாலக்ஷ்மி செய்றா'.. சீக்ரெட்டை உடைத்த ரவீந்தர் !
கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் டாபிக்காக வலம் வருவது தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி திருமண விஷயம் தான். ரவீந்தர் சந்திரசேகரன், தமிழ் திரையுலகில் சுட்ட கதை, முருங்கைக்காய் சிப்ஸ், கொலை நோக்கு பார்வை, கல்யாணம் போன்ற பல திரைப்படங்களை தயாரித்ததன் மூலம் தயாரிப்பாளராக வலம் வருபவர்.
இவர் கடந்த சில தினங்களுக்கு முன் பிரபல சின்னத்திரை நடிகை மஹாலக்ஷ்மி அவர்களை திருமணம் செய்து கொண்டார். படிக்கும் காலத்திலேயே கலை துறையில் அடியெடுத்து வைத்த இவர், நிறைய சீரியல்களில் நடித்துள்ளார். முக்கியமாக பல தொடர்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அன்பே வா, யாமிருக்க பயமேன், அரசி, செல்லமே, வாணி ராணி, பிள்ளை நிலா, விலாஸ் போன்ற பல பிரபல தொடர்களில் நடித்துள்ளார். தற்போது, ரவீந்தர் மற்றும் மஹாலக்ஷ்மி திருமணம் செய்துகொண்டுள்ளார். இருவருக்குமே இது 2வது திருமணம்.
இந்நிலையில், இவர்கள் திருமணம் ஒரு பேசுபொருளாக மாறியுள்ளது. இதனால், விளக்கங்கள் கொடுக்கும் வகையில், பல பேட்டிகளில் இருவரும் பங்கேற்று வருகின்றனர். அப்படி ஒரு பேட்டியில் பங்கேற்ற இவர்கள் கூறிய ஒரு விஷயம் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.
அதாவது, கடந்த சில மாதங்களுக்கு முன் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடந்தது. அதனைத் தொடர்ந்து, நயன்தாரா எங்கு சென்றாலும் அந்த மஞ்ச கயிற்றை கழட்டாமல் இருந்து வருகிறார். மேலும், வசதி இருந்தாலும் தங்க செயின் போடாமல் அவர் இப்படி இருப்பது அனைவராலும் பேசப்பட்டு வருகிறது.
இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் மணமுடித்த மகாலட்சுமி திருமணம் முடிந்த பின்னரும் நயன்தாரா போலவே தாலியை தங்க செயினில் போட்டுக் கொள்ளாமல் மஞ்சள் கயிறு உடனே போட்டுக் வருகிறார். திருமணம் முடிந்த கையோடு நயன்தாரா போலவே மஞ்சள் கயிறு தொங்கும் தாலியை பளிச்சென்று காட்டி தன்னுடைய instagram பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் மகாலட்சுமி.
இதைப் பார்த்த பதிவிட்டு நயன்தாரா ஸ்டைலை பின் தொடர்கிறீர்களா என்றும் கமெண்டுகளை போட்டு வந்திருந்தார்கள். இப்படி ஒரு நிலையில் இது குறித்து ரவீந்தர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில் ”நாங்கள் இருவரும் காதலிக்க துவங்கி ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டது இந்த ஒன்றரை ஆண்டுகளில் மகாலட்சுமி அவரது காதலை சொன்ன அந்த தேதியில் மாதம் ஒருமுறை ஏதாவது ஒரு பரிசை வாங்கிக் கொடுத்துக் கொண்டே இருந்தார். ஆனால் இதுவரை நான் அவருக்கு எந்த பரிசையும் வாங்கிக் கொடுக்கவில்லை.
ஆனால், அப்படி வாங்கிக் கொடுத்தால் என் காதலிக்கு வாங்கி கொடுத்தது போல ஆகிவிடும் நான் யோசித்தது என்னவென்றால் அவளை திருமணம் செய்து என்னுடைய மனைவிக்கு ஏதாவது திருமணம் வாங்கி கொடுக்க வேண்டும் என்பதுதான், மேலும் அப்படி அவள் ஆசைப்பட்ட ஒரு பரிசு மஞ்சள் கயிறில் தொங்க தாலி கட்டிக் கொள்வது தான், அதுவும் நயன்தாரா மேடம் பண்ணாலும் பண்ணாங்க இவை தொல்லை தாங்க முடியவில்லை.
வீட்டில் என்னுடைய அம்மா கூட மஞ்சக்கயிறு கட்டி அதை பராமரிப்பது எல்லாம் அவ்வளவு எளிது கிடையாது தினமும் அதில் மஞ்சள் தேய்க்க வேண்டும் அதனால் செயின் வாங்கி போட்டுக்கொள் என்றார்கள். ஆனாலும் இவள் கேட்கவில்லை அவளுக்கு தாலியை விட மஞ்சக்கயிறு கட்டி கழுத்தில் தொங்கவிட வேண்டும் என்பதுதான் ஆசையாக இருந்தது. அதை நான் செய்து விட்டேன் என்று ரவீந்தர் கூறியிருக்கிறார். பின்னர், இது நயன்தாரா திருமணத்திற்கு முன்னதாகவே முடிவு செய்தது என அவர் கூறியுள்ளார்.
#Ravindar About #Nayanthara pic.twitter.com/nlgPQhhzP3
— chettyrajubhai (@chettyrajubhai) September 4, 2022