பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவுக்கு திடீர் ஆப்ரேஷன் ! ஹேமா சதீஷின் வீடியோ வைரல் !

Actress hema sathish pandian stores meena had an operation

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும், சீரியல் தொடர்களும் ரசிகர்களின் பேவரைட்டாக மாறி வரவேற்பு கிடைப்பது வழக்கம். அப்படி, பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தொடர்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரும் ஒன்று.

Actress hema sathish pandian stores meena had an operation

அண்ணன் - தம்பி பாசம், கூட்டு குடும்பம் என வாழ்க்கையை எடுத்துக்காட்டாக காட்டும் இந்த சீரியல் தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Actress hema sathish pandian stores meena had an operation

அப்படி தமிழில் உருவாக்கப்பட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மக்கள் வரவேற்பினால் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. 3 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த தொடருக்கும் இத்தொடரில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கும் விஜய் டெலிவிஷன் விருது கிடைத்தது.

Actress hema sathish pandian stores meena had an operation

இந்த சீரியலில் சின்ன அண்ணியாக மீனா ரோலில் நடிப்பவர் நடிகை ஹேமா ராஜ்குமார். இவர் இதற்கு முன்பு சின்னதம்பி சீரியலில் செவ்வந்தி என்கிற ரோலில் நடித்திருக்கிறார். மேலும், ஒரு சில படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

Actress hema sathish pandian stores meena had an operation

இருப்பினும், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல பிரபலத்தை தந்தது. இவரின் இயல்பான பேச்சும் நடிப்பும் இந்த சீரியலுக்கு கூடுதல் பலம். இவர் சீரியல் மட்டுமின்றி, தனியாக யூடியூப் சேனல் ஒன்று நடத்தி தனது வழக்கமான நிகழ்வுகளை பதிவு செய்து ஏராளமான ரசிகர்களை தன் வசம் ஈர்த்து கொண்டுள்ளார். அந்த வகையில் நேற்றைய தினம் ஹேமா இந்த யூடியூப் சேனலில் ‘எனக்கு ஆப்ரேஷன்’ என்ற டைட்டிலில் வீடியோ ஒன்று வெளியிட்டார்.

Actress hema sathish pandian stores meena had an operation

வீடியோவின் தலைப்பை பார்த்த ரசிகர்கள் பதறி போனார்கள். அதில் ஹேமா ஆஸ்பிட்டலில் அட்மிட் ஆனது, டெஸ்ட் எடுத்தது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இதை பார்த்து ரசிகர்கள் ஹேமாவுக்கு என்ன ஆச்சு..? திடீரென எதற்கு ஆப்ரேஷன் என்றெல்லாம் கேள்வி எழுப்பினர்.

Actress hema sathish pandian stores meena had an operation

இந்த ஆப்ரேஷன் பற்றி ரசிகர்களிடம் ஷேர் செய்த ஹேமா, சில மாதங்களாக தனது கழுத்துக்கு கீழ் பகுதியில் 4 செ.மீ அளவில் கட்டி ஒன்று இருந்துள்ளது. இது தொடர்பாக பரிசோதனை செய்த மருத்துவர்கள், இது கேன்சர் கட்டியாக மாறி விடும் அபாயம் இருப்பதாக கூறியுள்ளனர்.

இதனால் தூக்கம் இல்லாமல் தவித்த நான், குடும்பத்தினருடன் ஆலோசனை செய்து கட்டியை நீக்க முடிவு எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதற்காக செய்யப்பட்ட ஆப்ரேஷன் தான் இது என்றும், இந்த ஆப்ரேஷனில் தனது தங்கை கூடவே இருந்து தன்னை கவனித்து கொண்டார் என்றும் தெரிவித்துளளார். மேலும், பெண்கள் தங்கள் உடல் பகுதியில் இருக்கும் கட்டிகளை அலட்சியம் காட்ட வேண்டாம் என்றும் உடனே மருத்துவரை பார்ப்பது நல்லது என்றும் அறிவுரை கூறியுள்ளார்.

Share this post