'ஆடி போய் ஆவணி வந்தா டாப்பா வருவாள்'.. மகளுக்கு பெயரை மாற்றும் நடிகை கெளதமி?...
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக பார்க்கப்பட்டவர் நடிகை கௌதமி. முன்னதாக கமலஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ் உள்ளிட்ட பல உச்ச நட்சத்திரங்களுடன் நடித்தவர் கௌதமி. தற்போது, அவர் அரசியலில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
சமீபத்தில், அவர் அதிமுகவில் இணைந்தார் என்பது அனைவரும் அறிந்த விஷயம். இந்த நிலையில், கௌதமியின் ஒரே மகள் சுப்புலட்சுமி படித்து பட்டம் பெற்று நிலையில், அவரை லண்டனுக்கு அனுப்பி நடிப்பதற்கான ஆறு மாத கோர்ஸ் ஒன்றை முடித்து சென்னை திரும்ப இருப்பதாக கூறப்படுகிறது.
அநேகமாக, அவரது சினிமா என்ட்ரீ அடுத்த வருடம் நிச்சயமாக இருக்கும் என்றும், சினிமாவுக்காக, அவரது பெயர் மாற்றம் செய்யப்படும் என்றும் தெரிய வருகிறது. மேலும், அவர் விக்ரம் மகன் துருவிக்ரம் நடிக்கும் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக இருப்பதாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கோலிவுட்டில் முணுமுணுக்கப்பட்டு வருகிறது.