Viral Video: 'என் முன்னாடியே வேற பொண்ணோட இருந்தாரு' - நடிகை திவ்யா பரபரப்பு பேட்டி.. '3 மாத கருவை கலைக்க பொய் புகார்' - நடிகர் அர்ணவ் போலீஸில் புகார்
வெள்ளித்திரை நடிகர் - நடிகைகளை போலவே சின்னத்திரை பிரபலங்களுக்கும் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும், ஒரே சீரியலில் இணைந்து நடிக்கும் போது அந்த சீரியலில் நடிக்கும் நடிகர் -நடிகை காதலித்து திருமணம் செய்து கொள்வதும் நாம் கேள்வி படுவதுண்டு.
சித்து - ஷ்ரேயா, சஞ்சீவ் - ஆலியா மானசா என பலரும் இதுக்கு சான்று. அந்த வகையில், சன் டிவியில் ஒளிபரப்பான ‘கேளடி கண்மணி’ சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை திவ்யா ஸ்ரீதர் மற்றும் நடிகர் அர்ணவ்.
இந்த சீரியலில் நடித்த போது ஏற்பட்ட பழக்கம், நாளடைவில் காதலாக மாறியது. சுமார் 5 வருடங்களாக லிவிங் டூ கெதர் வாழ்க்கையில் இருந்த இவர்கள், திவ்யா கர்ப்பமான பின்னர் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் கூட தங்களின் திருமண புகைபடங்களை திவ்யா சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து, இரண்டு மாதம் கர்ப்பமாக இருக்கும் தகவலை வெளியிட்டிருந்தார். மேலும் திவ்யா, சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செவ்வந்தி என்கிற தொடரிலும், அர்ணவ் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘செல்லம்மா’ என்கிற தொடரிலும் நடித்து வருகிறார்.
மிகவும் சந்தோஷமாக தங்களுடைய திருமண வாழ்க்கையை துவங்கிய திவ்யா திடீர் என, தன்னை கணவர் அர்ணவ் அடித்து துன்புறுத்தியதில், வயிற்றில் அடிபட்டு குழந்தை எந்நேரமும் கலையலாம் என மருத்துவர்கள் கூறியதாக, மருத்துவமனையில் இருந்தபடியே வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
அர்ணவ் அடித்ததில் மயங்கி விட்டதாகவும், மயக்கம் தெளிந்தவுடன் கண்விழித்து பார்த்தபோது தனது கணவர் அங்கே இல்லை என்றும் பின்னர் வயிறு வலி ஏற்பட்டு பிளீடிங் ஆக ஆரம்பித்ததும் மருத்துவமனைக்கு வந்ததாக அந்த வீடியோவில் கண்ணீர் மல்க பேசி உள்ளார். மேலும் இருவருக்கும் இடையே நடந்த பல்வேறு விஷயங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில், தற்போது திவ்யாவின் கணவர் அர்ணவ் , இந்த புகாரை மறுத்துள்ளளோடு , 3 மாத கர்ப்பத்தை கலைப்பதற்காகவே திவ்யா பொய் புகார் அளித்துள்ளதாக கூறி ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். நான் வீட்டில் இல்லை என்பதற்கு சிசிடிவி காட்சியே ஆதாரம் என தெரிவித்துள்ளார். திவ்யாவின் புகாரை தொடர்ந்து, அர்ணவ்வும் புகார் அளித்துள்ள சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.