படு குண்டாகி இருந்து இப்போ ஒல்லி பெல்லி நடிகையாக மாறிய அனுஷ்கா.. வைரலாகும் லேட்டஸ்ட் க்ளிக்

Actress anushka shetty transformation images getting viral on social media

தெலுங்கு மொழியில் சூப்பர் என்னும் திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அடியெடுத்து வைத்தவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. மஹாநந்தி, அஸ்திரம், ஸ்டாலின் போன்ற தெலுங்கு மொழி திரைப்படத்தில் தொடர்ந்து நடித்து வந்த அனுஷ்கா, மாதவன் ஜோடியாக ரெண்டு என்னும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்தார்.

Actress anushka shetty transformation images getting viral on social media

தெலுங்கு மொழியில் பெரிய வரவேற்பை பெற்று வந்த இவர், தனது 2 படமே தளபதியுடன் ஜோடியாக வேட்டைக்காரன் படத்தில் நடித்தார். இதனைத் தொடர்ந்து, வானம், தெய்வத்திருமகள், சகுனி, தாண்டவம், அலெக்ஸ் பாண்டியன், சிங்கம் 1,2, இரண்டாம் உலகம், லிங்கா, என்னை அறிந்தால், பாகுபலி, இஞ்சி இடுப்பழகி, தோழா, பாகமதி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Actress anushka shetty transformation images getting viral on social media

தமிழில், சூப்பர் ஸ்டார் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, ஆர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். மேலும், தெலுங்கு மொழியிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இவரது நடிப்பு பயணத்தில் அருந்ததி மற்றும் பாகுபலி திரைப்படங்கள் பெரிய மைல்கல்லாக அமைந்தது.

Actress anushka shetty transformation images getting viral on social media

அதன்பிறகு, அனுஷ்கா சரியாக படங்கள் நடிப்பதில்லை.இவர் திடீரென உடல் எடை கூடி ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருந்தார். இன்ஸ்டாவில் சில நேரங்களில் புகைப்படங்கள் பதிவிடும் அனுஷ்கா சமீப காலமாக ஆக்டிவாக இருக்கிறார்.

Actress anushka shetty transformation images getting viral on social media

2020ம் ஆண்டு கடைசியாக அனுஷ்கா நடிப்பில் நிசப்தம் என்ற படம் வெளியாகி இருந்தது. கொரோனா பிரச்சனைகளுக்கு பிறகு, மகேஷ் பாபுவுடன் இணைந்து புதிய படம் நடிப்பதாக அறிவித்தார். அந்த படத்தை யூவி கிரியேஷன்ஸ் தயாரிக்கிறார்கள். ஆனால் மற்றபடி வேறு எந்த தகவலும் வரவில்லை.

Actress anushka shetty transformation images getting viral on social media

தற்போது இன்ஸ்டாவில் அனுஷ்கா, ஒரு திருமணத்திற்கு சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர் உடல் எடை குறைத்துள்ளது போல் இருக்கிறார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Actress anushka shetty transformation images getting viral on social media

Share this post