'தவறான உறவில் இருந்தேன்..' யார் அவர்? நடிகை அஞ்சலி பேட்டியில் சொன்ன பரபரப்பு தகவல்..
இயக்குனர் ராம் இயக்கத்தில் ஜீவா ஜோடியாக 2007ம் ஆண்டு வெளியான ‘கற்றது தமிழ்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. அதன் பின்னர், இவர் நடித்த ‘அங்காடி தெரு’ படம் ஹிட் அடித்ததை தொடர்ந்து, நடிகை அஞ்சலிக்கு அடுத்தடுத்து நல்ல வரவேற்பு கிடைக்கவே, எங்கேயும் எப்போதும், கலகலப்பு, ஆயுதம் செய்வோம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார்.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் வாய்ப்புகள் கிடைக்கத் தொடங்கின. தமிழில், சுமார் 20 திரைப்படங்கள் வரை நடித்த அஞ்சலி திடீரென நடிப்பை ஓரம் கட்டிவிட்டு ஐதராபாத்’ல் செட்டில் ஆனார். சிறிய இடைவெளிக்கு பின்னர் சிங்கம் 2 படத்தில் ஒரு பாட்டிற்கு மட்டும் குத்தாட்டம் போட்டார்.
பின்னர், நடிப்பில் ஆர்வம் காட்ட தொடங்கிய அஞ்சலி, நாடோடிகள் 2 படத்தில் நடித்தார். தமிழ் திரையுலகில் வெப்சீரிஸ்களும் அதிக அளவில் வெளிவர தொடங்கிய நிலையில், ‘பாவக்கதைகள்’ ‘நிசப்தம்’, ‘நவரசா’ உள்ளிட்ட சீரிஸ்களில் நடித்து வந்த நிலையில், அடுத்தடுத்து படங்களிலும் கமிட் ஆகியுள்ளார்.
இந்நிலையில், சமூக வலைதள பக்கங்களில், போட்டோக்கள், வீடியோக்கள் என அப்லோட் செய்து வருகிறார். தற்போது, ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் RC15 திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். மேலும், பிரபல தெலுங்கு நடிகர் நிதின் நடிப்பில் உருவான ‘மச்சேர்லா நியோஜகவர்கம்’ என்ற படத்தில் நடிகை அஞ்சலி கவர்ச்சி நடனம் ஆடி இருந்தார்.
கடந்த இரண்டு வருடங்களாக சரிவர திரையுலகில் கவனம் செலுத்தாமல், நடிகை அஞ்சலி பட வாய்ப்புகளை ஏற்க மறுத்ததாக கூறப்பட்டது. இதற்கு காரணம் தயாரிப்பாளர் ஒருவர் கட்டுப்பாட்டில் அஞ்சலி இருப்பது தான் என சில கிசுகிசு எழுந்த நிலையில், தற்போது முதல் முறையாக… டாக்சிக் ரிலேஷன்ஷிப் குறித்து ஊடகம் ஒன்றிக்கு இவர் கொடுத்துள்ள பேட்டியில் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு நபருடன் ஏற்பட்ட ரிலேஷன்ஷிப்பால் தன்னுடைய கேரியரை கவனிக்க முடியாமல் போனதால், அந்த உறவு தவறான உறவு என அஞ்சலி தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய கேரியருக்கு தடையாக இருந்த உறவை விட, கேரியருக்கு முக்கியத்துவம் கொடுப்பது தான் சிறந்தது என்றும், நடிகை அஞ்சலி கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகினர் மத்தியில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும் அந்த நபர் யார் என்பதை அஞ்சலி கூற மறுத்துவிட்டார்.