மாவீரன் படத்தில் SK ஜோடியாகும் தமிழ் பட பிரபலத்தின் மகள்.. வெளியான அறிவிப்பு வீடியோ !

Actress aditi shankar to act in maaveeran movie as heroine

விஜய் தொலைக்காட்சியில் சாதாரணமாக தொகுப்பாளராக பணியாற்றி தனது நகைச்சுவை பேச்சுகளால் மக்கள் மனதில் நின்றவர் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் செம பேமஸ் ஆன இவர், பல பிரபல நிகழ்ச்சிகளையும், விருது வழங்கும் விழாக்களிலும் தொகுப்பாளராக இருந்துள்ளார்.

Actress aditi shankar to act in maaveeran movie as heroine

இதன் நடுவே, ஒரு சில குறும்படங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயன், மெரினா திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தார். அதனைத் தொடர்ந்து, ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த 3 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Actress aditi shankar to act in maaveeran movie as heroine

அதன் பின்னர், மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட படங்கள் பெரிதும் வெற்றி பெறவில்லை என்றாலும், எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரஜினிமுருகன், ரெமோ, வேலைக்காரன், கனா, டாக்டர் என தொடர் வெற்றிப்படங்களில் நடித்தார்.

Actress aditi shankar to act in maaveeran movie as heroine

தற்போது, இவர் நடிப்பில் டான் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. அயலான் திரைப்படம் நிலுவையில் உள்ளது. நடிகர், பாடலாசிரியர், பின்னணி பாடகர், தயாரிப்பாளர் என பல திறமைகளை கொண்டவர். மிக குறுகிய காலத்தில் மக்கள் மனதில் இடம் பிடித்து பெரும் அந்தஸ்தை எட்டியுள்ளவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

Actress aditi shankar to act in maaveeran movie as heroine

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்து பார்க்கும் படியான திரைப்படங்களை தற்போது வரை தந்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தை தொடர்ந்து இவர் நடித்துள்ள படம் டான். லைக்கா நிறுவனம் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ் ஜே சூர்யா, சிவாங்கி, பாலசரவணன், ஆர் ஜே விஜய் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

Actress aditi shankar to act in maaveeran movie as heroine

அப்பா சென்டிமென்ட், காலேஜ் கலாட்டா, SKவின் காமெடி, காதல் என அனைத்தையும் அருமையாக டெலிவெரி செய்துள்ளார் இயக்குனர் சிபி. பக்கா பாசிட்டிவ் ரிவியூ பெற்று வரும் டான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Actress aditi shankar to act in maaveeran movie as heroine

இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து உருவாகியுள்ள திரைப்படம் பிரின்ஸ். இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இப்படத்தின் இயக்குனர் அனுதீப் இயக்கியுள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் சத்யராஜ், ரித்து வர்மா, உக்ரைன் மாடல் அழகி மரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Actress aditi shankar to act in maaveeran movie as heroine

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் முக்கியமானவராக திகழ்ந்து நடிகர் சிவகார்த்திகேயன், இவரது திரைப்பட வசூல்களும், சம்பளமும் கணிசமாக உயர்ந்து கொண்டே வருகிறது. சமீபத்தில், மாவீரன் படத்தின் வித்தியாசமான announcement டீசர் வீடியோ வெளியாகி வைரல் ஆனது.

Actress aditi shankar to act in maaveeran movie as heroine

இதனைத் தொடர்ந்து, தற்போது படத்தின் கதாநாயகி குறித்து அறிவிப்பு வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் அவர்களின் மகள் மற்றும் விருமன் படத்தில் நடித்து வரும் கதாநாயகியான அதிதி ஷங்கர், இப்படத்தின் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக அதிகாரபூர்வமாக படக்குழு அறிவித்துள்ளனர்.

Share this post