தொட்டு தொட்டு பேசும் சில்தானா பாடலுக்கு ஆடிய அதிதி ஷங்கர்.. டிரெண்ட்டாகும் வீடியோ..!

actress-aditi-shankar-dance-video-post-viral

இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் என்று சொன்னால் விரல்விட்டு எண்ணும் வகையில் சில இயக்குனர்கள் மிஞ்சுவார்கள். அதில் முக்கியமான இயக்குனர் என்று பார்த்தால் இயக்குனர் ஷங்கர். இவரின் படங்கள் தமிழைத் தாண்டி பல மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

மேலும், இவரது இரண்டாவது மகள் அதிதி சங்கர் நடிகர் கார்த்தி நடித்த விருமன் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அதிதி ஷங்கர் தமிழில் முதலில் நடித்த திரைப்படம் விருமன்.

actress-aditi-shankar-dance-video-post-viral

அதிதி ஷங்கர் தற்போது நேசிப்பாயா, விக்னேஷ் காந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகி வரும் படத்திலும் நடித்து வருகிறார். இதற்கிடையில், அவரின் செயல்பாடுகள் இணையத்தில் வெளியாகி விமர்சிக்கப்பட்டும் இருந்தனர். இதனிடையே சமீபத்தில், கூட இந்தியன் 2 படத்தின் ஆடியோ லான்சில் ஆட்டம் போட்டதை கூட கலாய்த்து இருந்தனர். தற்போது, இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அதிதி ஷங்கர், தொட்டு தொட்டு பேசும் சில்தானா என்ற பாடலுக்கு தலைவிரித்தாடும் வீடியோவை பகிர்ந்து உள்ளார். இதனையும், நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

Share this post