பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இனி காவ்யாவாக இவரா? சித்ரா மாதிரியே லைட்டா இருக்காங்க !
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும், சீரியல் தொடர்களும் ரசிகர்களின் பேவரைட்டாக மாறி வரவேற்பு கிடைப்பது வழக்கம். அப்படி, பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தொடர்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரும் ஒன்று.
அண்ணன் - தம்பி பாசம், கூட்டு குடும்பம் என வாழ்க்கையை எடுத்துக்காட்டாக காட்டும் இந்த சீரியல் தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அப்படி தமிழில் உருவாக்கப்பட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மக்கள் வரவேற்பினால் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. 3 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த தொடருக்கும் இத்தொடரில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கும் விஜய் டெலிவிஷன் விருது கிடைத்தது.
தற்போது, இந்த காலத்தில் எதார்த்தமாக நடக்கும் ஒரு விஷயம் தொடர்பாக கதை சென்று கொண்டிருப்பதால், ரசிகர்கள் ஆர்வமாக பார்க்க தொடங்கியுள்ளனர். மேலும், ஒரு கூட்டுக்குடும்பத்தில் நடக்கும் எதிர்பாராத சண்டைகள் வாக்குவாதங்கள் என சில பிரச்சனைகள் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திலும் எழுந்து வருகிறது.
இதில் நடிக்கும் ஸ்டாலின், சுஜாதா, வெங்கட், ஹேமா, குமரன், காவ்யா ஆகியோர்களின் நிஜப்பெயர்களை மறந்து மூர்த்தி-தனம், ஜீவா-மீனா, கதிர்-முல்லையாகத் தான் அனைவருக்கும் தெரியும். அந்த அளவிற்கு இந்த தொடர் மக்கள் மனதில் பதிந்துவிட்டது.
சமீபத்தில், 1000 எபிசோடுகளை முடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ், மூன்று ஆண்டுகளை கடந்த நான்காவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. இதனையடுத்து குழுவினர் அதனை கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரல் ஆனது.
இந்த சீரியலின் மூலமாக மிகப்பெரிய பிரபலமானவர் வி.ஜே. சித்ரா. அவர் கடந்த ஆண்டு மர்மமான முறையில் இறந்து விட்டதால், அவருக்கு பதிலாக காவ்யா முல்லையாக நடித்து வருகிறார்.
இந்த சீரியலில் நடிக்க தொடங்கிய நேரம் காவ்யாவிற்கு வெள்ளித்திரையில் பிரபல நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் பட வாய்ப்புகள் அடுத்தடுத்து வருவதால், விரைவில் இந்த சீரியலில் இருந்து விலகிக் கொள்வார் என தொடர்ந்து தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.
இதனால், அப்படி முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவ்யா விலகிக் கொண்டால் அதன் பிறகு அவருக்கு பதிலாக யார் நடிப்பார் என்ற வியூகங்களும் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் உலாவி வந்தது.
இதையடுத்து, முல்லையாக நடிக்கப்போவது அபிநயா என்பவர் தான் என தகவல் வெளியாகியுள்ளது. இவர் இதற்கு முன் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் சித்ரா தோழியாக ஒரு சீனில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் பார்ப்பதற்கு கூட ஒரு ஜாடையில் சித்ரா போலவே இருக்கிறார். உண்மையில் இவர் தான் புதிய முல்லையாக நடிக்க உள்ளாரா? அல்லது வேறு யாராவது நடிப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.