நடிகர் விக்ரமுக்கு திடீர் மாரடைப்பு ? மருத்துவமனையில் அனுமதி.. அதிர்ச்சியில் திரையுலகம் & ரசிகர்கள்

பிரபல முன்னணி நடிகராக தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழி திரையுலகில் டாப் நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். விளம்பர படங்களில் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த இவர், என் காதல் கண்மணி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
ஆரம்ப காலங்களில் பெரிதும் பிரபலம் அடையாத இவர், சேது திரைப்படத்தின் மூலம் திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தார். இவர் நடிகர் மட்டுமல்லாது டப்பிங் ஆர்ட்டிஸ்ட் மற்றும் பாடகராகவும் பணியாற்றியுள்ளார். காசி, ஜெமினி, பிதாமகன், அந்நியன், ஐ போன்ற திரைப்படங்கள் இவருக்கு மைல்கல்லாக அமைந்தது.
நடிப்பிற்காக தனது உடல்நிலையும் பொருட்படுத்தாது, தன்னை வறுத்தி தனக்கான கதாபாத்திரத்தில் நேர்த்தி கொடுப்பவர். இவரது மகன் துருவ் விக்ரம், தற்போது, ஆதித்யா வர்மா, மஹான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தற்போது நடிகர் விக்ரம், பொன்னியின் செல்வன், கோப்ரா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து முடித்து உள்ளார். இந்நிலையில் விக்ரமுக்கு இன்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் இருக்கும் ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
இந்த தகவல் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் விரைவில் குணமடைந்து திரும்ப வேண்டும் என ரசிகர்கள் பிராத்தித்து வருகின்றனர். ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்ட நடிகர் விக்ரம் தற்போது மீண்டும் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது திரையுலகை அதிர்ச்சிப்படுத்தியுள்ளது. அவருக்கு மாரடைப்பாக இருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால், உறுதியான தகவல் இல்லை.