சின்ன கீறல் கூட இல்ல... ஆசை ஆசையாக வாங்கிய Rolls Royce காரை விற்கும் விஜய்..!

actor-vijay-is-selling-his-favourite-car-with-this-price-amount

நடிகர் விஜய் வாங்கிய ரோல்ஸ் ராயல் கோஸ்ட் காரின் விலை மூன்று புள்ளி ஐந்து கோடி ரூபாயாகும், ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சீரிஸ்1 சேர்ந்த இந்த கார் லிட்டருக்கு ஐந்து முதல் 8 கிலோமீட்டர் வரை மைலேஜ் கொடுக்கக்கூடியது.

இதன் அதிகபட்ச வேகம் 250 கிலோமீட்டர் ஆகும். இந்த காரை இயக்குனர் ஷங்கர் இசையமைப்பாளர், ஏ ஆர் ரகுமான், நடிகர் விஜய், தனுஷ் ஆகியோர் வைத்திருக்கிறார்கள்.

actor-vijay-is-selling-his-favourite-car-with-this-price-amount

விஜய் பல கார்களை வைத்திருந்தாலும், இந்த கார் மீது அவருக்கு தனி பிரியம் உண்டு. அப்படி ஆசை ஆசையை வாங்கிய கார், எம்பயரி ஆட்டோ எனப் பிரீமியம் கார் டீலர்ஷிப்பில் விற்பனைக்கு வந்துள்ளது. இதற்காக காரை பல ஆங்கிளில் போட்டோக்கள் எடுக்கப்பட்டு, அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் விலை இரண்டு புள்ளி ஆறு கோடி ரூபாய் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

actor-vijay-is-selling-his-favourite-car-with-this-price-amount

அந்த வலைதள பக்கத்தில் விஜயின் கார் அனைத்து கோணங்களிலும் படம்பிடிக்கப்பட்டு முழு விவரங்களுடன் செய்தியாக வெளியாகி இருக்கிறது. 10 வருடங்களுக்கு மேல் ஆனாலும், விஜய் வாங்கிய ரோல்ஸ் ராயல் கோஸ்ட் காரில் சிறு கீறல் கூட கிடையாது. புத்தம் புதுசு போல் இருக்கும் அந்தக் கார் சர்வீஸ் செய்யப்பட்டு நன்றாக ஓடும் கண்டிஷனில் இருக்கிறது. இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் விஜய்யின் காரை யார் வாங்க போகிறார்கள் என்பதும் சர்ப்ரைசாக உள்ளது.

Share this post