தளபதி 66 படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு..!

Actor Thalapathy Vijay Next Movie Release Date Announced Team Pongal 20233

விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து, தோழா படத்தின் இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி அவர்கள் விஜய் வைத்து இயக்கும் திரைப்படம் தளபதி66. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகவுள்ளது.

Actor Thalapathy Vijay Next Movie Release Date Announced Team Pongal 20233

இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இப்படத்தில் விஜய் ஜோடியாக ரஷ்மிகா மந்தனா, முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார் மற்றும் ஷாம் நடிக்கின்றனர்.

விஜய்யின் ஆரம்பக் கட்டத்தில் வெளியான பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை போன்ற குடும்ப பின்னணி படமாக உருவாகிறது என்ற தகவல் வெளியானது. இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தளபதி 66 படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.

Actor Thalapathy Vijay Next Movie Release Date Announced Team Pongal 20233

தளபதி 66 திரைப்படம் வருகிற 2023ஆம் ஆண்டு பொங்கல் அன்று வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரபல நடிகர் பிரபு நடிக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

Share this post