நீ ஜெயிச்சுட்ட மாறா.. நடிகர் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது !

Actor suriya won national award for best actor for soorarai potru

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ஒரு சிலரில் ஒருவர் நடிகர் சூர்யா. நேருக்கு நேர் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு வந்த சூர்யாவிற்கு, ஆரம்ப காலத்தில் பெரிய படங்கள் ஏதும் ஹிட் ஆகாத நிலையில், காக்க காக்க, பிதாமகன், நந்தா, மௌனம் பேசியதே, 7ம் அறிவு போன்ற படங்கள் மூலம் செம பிரபலம் ஆனார்.

Actor suriya won national award for best actor for soorarai potru

மேலும், இவரது நற்குணங்கள் காரணமாக மக்கள் இடையில் இவருக்கு நல்ல பெயரும் உள்ளது. கடந்த வருடம் வெளியான ஜெய் பீம் படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்து இவரது நடிப்பு கொண்டாடப்பட்டது.

Actor suriya won national award for best actor for soorarai potru

இதன் பின்னர், சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படத்தை தொடர்ந்து, தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் 41வது படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறன், சுதா கொங்கரா என அடுத்தடுத்த படங்களில் சூர்யா ஒப்பந்தமாகி உள்ளார்.

Actor suriya won national award for best actor for soorarai potru

இதன் நடுவே, சர்ப்ரைஸாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் விக்ரம். இப்படத்தில், விஜய் சேதுபதி, பகத் பாசில், மைனா நந்தினி, ஷிவானி, மஹேஸ்வரி, காளிதாஸ் ஜெயராம் என ஒரு ரசிகர் பட்டாளமே நடித்தது. இதில் எதிர்பாராத சஸ்பென்ஸ் விதமாக சூர்யாவின் ரோலெக்ஸ் கதாபாத்திரம் நல்ல வரவேற்பு பெற்றது.

Actor suriya won national award for best actor for soorarai potru

தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வரும் நடிகர் சூர்யா, தனது மனைவியுடன் இணைந்து 2டி என்கிற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி, அதன் மூலம் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து வருகிறார். இவர்கள் தயாரிப்பில் வெளிவந்த 36 வயதினிலே, கடைக்குட்டி சிங்கம், சூரரைப் போற்று, ஜெய் பீம் போன்ற படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.

Actor suriya won national award for best actor for soorarai potru

இந்நிலையில், 68-வது தேசிய திரைப்பட விருது அறிவிப்பு நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான படங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தம் இந்தியா முழுவதிலும் இருந்து 295 திரைப்படங்கள் இந்த விருதுக்கு அனுப்பப்பட்டிருந்தன. அதில் இருந்து 66 திரைப்படங்களும், 140க்கும் மேற்பட்ட டாக்குமெண்டரி படங்களையும் ஜூரி மெம்பர்கள் பார்த்தனர்.

Actor suriya won national award for best actor for soorarai potru

சிறந்த நடிகருக்கான தேசிய விருது சூரரை போற்று படத்திற்காக நடிகர் சூர்யாவுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் 2020ம் ஆண்டு ஓடிடியில் வெளியிடப்பட்ட சூரரைப் போற்று திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சூர்யாவுக்கு இவ்விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. நடிகர் சூர்யா தேசிய விருதை வெல்வது இதுவே முதன்முறை ஆகும்.

Share this post