ஷூட்டிங்-கில் சூர்யாவுக்கு ஏற்பட்ட விபத்து… தலையில் காயம்.. அச்சச்சோ என்னாச்சு?..

actor-suriya-got-head-injury-in-suriya-44-movie-shooting

நடிகர் சூர்யா தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இணைந்து சூர்யா 44 படத்தில் நடித்தார். இந்த படத்தில் டைட்டில் உள்ளிட்ட அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் எதிர்பார்க்கப்படுகின்றன. இந்நிலையில், ஆக்ஷன் காட்சியின் ஒன்றின் போது சூர்யாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஷூட்டிங் உடனே நிறுத்தப்பட்டு சூர்யாவிற்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஓய்வெடுக்கும் படியும் அறிவுறுத்தியுள்ளனர். இதனால், அவர் சில தினங்கள் ஓய்விற்கு பிறகு மீண்டும் இந்த படத்தின் ஷூட்டிங்கில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

actor-suriya-got-head-injury-in-suriya-44-movie-shooting

இதனை தொடர்ந்து, அடுத்தடுத்த ஷூட்டிங்கை மிகவும் சரியான திட்டமிடலுடன் கார்த்திக் சுப்புராஜ் மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது சூர்யாவிற்கு ஏற்பட்ட விபத்து மற்றும் காயத்தை தொடர்ந்து படத்தின் ஷூட்டிங் சில தினங்களில் தாமதப்படுத்தப்பட்டுள்ளது. சில தினங்களில் நடத்தப்பட்டு இரண்டாவது கட்ட ஷூட்டிங் நிறைவு செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Share this post