Playboy-னு ஒத்துக்குறேன்.. ஆனா, அவங்க விருப்பம் இல்லாம நடக்கல.. நடிகர் சிம்பு OPEN TALK..!(Video)
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், இசையமைப்பாளராகவும், நடிகராகவும் திகழ்ந்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் டி ராஜேந்தர். இவரது, மகன் சிம்பு வை குழந்தை நட்சத்திரமாக திரையில் அறிமுகப்படுத்தினார். தற்போது, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக சிம்பு விளங்கி வருகிறார்.
இவரை எஸ் டி ஆர் என்று ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். தற்போது, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கக்கூடிய சிம்பு சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகை நயன்தாராவை ரகசியமாக காதலித்து நெருக்கமாக இருந்தார்.
அவர்களின் லிப்லாக் புகைப்படங்கள் கூட இணையதளத்தில் வெளியானது. அதையடுத்து, அவரை பிரிந்து நட்பாக பழகி வருகிறார் சிம்பு. தற்போது, நயன்தாராவிற்கு திருமணமாகி வாடகை தாயின் மூலம் இரண்டு ஆண் குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதன் இடையே, நடிகை ஹன்சிகாவை காதலித்து அந்த காதலும் கைகூடாமல் பிரேக் அப் ஆகிவிட்டது. தற்போது, 40 வயதாகும் சிம்பு இன்னும் திருமணம் செய்யாமலே வாழ்ந்து வருகிறார். இவருக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என அவரது தந்தை டி ராஜேந்திரனும் ஆசைப்பட்டு பெண் தேடும் செய்தியெல்லாம் கூட இணையதளத்தில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.
பொதுவாக சிம்பு மனதில் பட்டதை ஓபனாக பேசுவதால் தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கிருக்கிறார். அது மட்டும் இன்றி பல நடிகைகளுடன் கிசுகிசுக்களும் இருக்கத்தான் செய்கிறது. இந்த நிலையில், நடிகர் சிம்பு அளித்த பழைய பேட்டி ஒன்று தற்போது, சமூக வலைதளங்களில் வெளியாகி காட்டு தீ போல் பரவி வருகிறது.
அதில், அவர் யார் வேண்டுமானாலும் சொல்லலாம் சிம்பு ஒரு பிளேபாய், சிம்புவுக்கு அத்தனை பொண்ணுங்க இருக்காங்க என்று கூறலாம். ஆனால், ஒரு பெண்ணுடைய விருப்பம் இல்லாமல் தொட்டது கூட இல்லை இந்த சிலம்பரசன். சத்தியம் பண்ணி கூட சொல்லுவேன் என்று சிம்பு அந்த பேட்டியில் பேசியுள்ளார்.
இதான் சிம்பு 🗿🔥 pic.twitter.com/c4XbseZzNP
— 𝕩 ק ᴇ ʀ ᴋ (@perk_xyz) June 23, 2024