'கீழ இறங்கி பாக்குறீங்க.. திருத்த முடியாது..' பிரபல தமிழ் நடிகர்களை திட்டி சாந்தனு போட்ட பதிவு !
பிரபல இயக்குனர் பாக்யராஜ் மற்றும் நடிகை பூர்ணிமா பாக்யராஜ் அவர்களின் மகன் ஷாந்தனு. குழந்தை நட்சத்திரமாக வேட்டிய மடிச்சு கட்டு படத்தில் நடித்த இவர், முதன் முதலாக 2008ம் ஆண்டு சக்கரக்கட்டி படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, சித்து +2, கண்டேன், ஆயிரம் விளக்கு, அம்மாவின் கைபேசி, கதை திரைக்கதை வசனம் இயக்கம், வாய்மை, கோடிட்ட இடங்களை நிரப்புக, முப்பரிமாணம், வானம் கொட்டட்டும், பாவ கதைகள், மாஸ்டர், கசடதபற, முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற திரைப்படங்களில் நடித்துளளார்.
இவர், பிரபல தொகுப்பாளினி கீர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நடிகர் சாந்தனு ட்விட்டரில் கடும் கோபமாக ஒரு பதிவு போட்டிருக்கிறார். அது எதை பற்றியது என்று தான் தற்போது பலரும் பேசி வருகிறார்கள்.
நேற்று நடிகர் பாக்யராஜை நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கி அறிவிப்பு வெளியானது. நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணிக்கு எதிராக பாக்யராஜ் தலைமையில் அணி போட்டியிட்டு தோற்றது. இந்நிலையில், அவர் பதவியில் இருப்பவர்கள் மற்றும் தேர்தல் பற்றி தவறான தகவல்கள் பரப்புகிறார் என சொல்லி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது.
தற்போது 6 மாத காலத்திற்கு பாக்யராஜ் நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். இந்த விஷயத்திற்காக தான் சாந்தனு விஷாலை மறைமுகமாக இப்படி ட்விட்டரில் தாக்கி பேசி இருக்கிறார் என சிலர் கூறி வருகின்றனர்.