ஒரே வருடத்தில் 28 திரைப்படங்களா.. பிரபல தமிழ் பட நடிகரின் வெற்றி.. ரஜினி, கமல், விஜய், அஜித் எல்லாம் தள்ளி நிக்கணும் போல..

Actor sathyaraj acted 28 films got released in the same year than any top actors

சட்டம் என் கையில் என்னும் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமாகி, சாவி என்னும் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சத்யராஜ். கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்த இவர், கொங்கு தமிழில் பேசும் நக்கல் பேச்சிற்கு பெயர் பெற்றவர்.

திரைப்படங்களில் இவர் பல முக்கிய துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், தான் நடிக்கும் படத்தில் இவரது கதாபாத்திரம் பேசப்படும் அளவிற்கு திறமையாக நடிப்பவர். மந்திர புன்னகை, கடமை கண்ணியம் கட்டுப்பாடு, மக்கள் என் பக்கம், சின்னப்பதாஸ் போன்ற பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படத்தில் நடித்துள்ளார்.

Actor sathyaraj acted 28 films got released in the same year than any top actors

ஒன்பது ரூபாய் நோட்டு, 6’2, பாகுபலி, அமைதிப்படை போன்ற திரைப்படங்களில் இவரது கதாபாத்திரம் தற்போது வரை பெரிதும் பேசப்பட்டு வருகிறது. ஹீரோ, காமெடி நடிகர், வில்லன், குணச்சித்திர வேடம் அனைத்தையும் ஏற்று நடிக்க கூடியவர்.

இவர் நடிப்பில் 200க்கும் அதிகமான திரைப்படங்கள் வெளியாகிவிட்டன. சமீப காலமாக, ஒவ்வொரு வருடமும் சுமார் 200 படங்களுக்கும் மேல் வெளியாகிறது. அதில், முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், அஜித், விஜய், ஆகியோரின் படங்கள் ஒன்று அல்லது இரண்டு தான் வெளிவரும்.

ஆனால், ஒரு பிரபல நடிகர் நடித்த 28 படங்கள் ஒரே ஆண்டில் வெளியானது குறித்து திரையுலகில் அதிகம் பேசப்படவில்லை? கடந்த 1985ம் ஆண்டு சத்யராஜ் நடிப்பில் 28 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்த படங்களில், சத்யராஜ் கதாநாயகன் மற்றும் வில்லனாக நடித்திருந்தார்.

Share this post