ச்சே.. கண்ணே கலங்குதுங்க.. துரோகத்தால் வீழ்த்தப்பட்ட நடிகர் பிரசாந்த்..!
அந்தகன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல்வேறு பேட்டிகளை அளித்து வருகிறார் பிரசாந்த். இந்த படத்தின் கதாநாயகன் பிரசாந்திடம் சில கேள்விகள் முன்வைக்கப்பட்டது. அதற்கு, சிறப்பான பதில்களை அவர் கூறியுள்ளனர்.
அதில், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் முதலில் நடிக்க ஒப்பந்தமானது நடிகர் பிரஷாந்த் தான். இந்த படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டதே என நீங்கள் என்றாவத வருத்தப்பட்டது உண்டா என்ற கேள்வி பிரசாத்திடம் கேட்கப்பட்டது.
அதற்கு, அப்படியெல்லாம் இல்லை. நான் அந்த நேரத்தில் வேறொரு படத்தில் நடிக்க நினைத்தேன். அதுதான் எனக்கு முக்கியமாகப்பட்டது. அதனால்தான், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் நடிக்க முடியவில்லை என பிரசாந்த் பதிலளித்திருந்தார்.
மேலும், ஷங்கரின் காதலன் படத்தில் நடிக்க என்னை அணுகினர் ஆனால், அந்த நேரத்தில் நான் வேறொரு கமிட்மெண்டில் இருந்ததால் அந்தப்படமும் மிஸ் ஆகிடுச்சு, நான் நடித்த படங்கள் வெற்றி பெற்றால் அதனை கொண்டாடியதும் இல்லை.
தோல்வியடைந்தால், அதற்காக வருத்தப்பட்டதும் இல்லை. மற்றொரு நடிகர் நடித்த அந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தால், நான் மகிழ்ச்சியாக தான் கருதுகிறேன். அதுதான் சினிமாவில் இருக்கும் அனைவருக்கும் இருக்க வேண்டிய பண்பு என நினைக்கிறேன்.
மேலும், துரோகம் என கேட்டதற்கு ஒரு நிமிடம் யோசித்த நடிகர் பிரசாந்த், அது ஒரு எமோஷன் நம்பியவர்களை ஏமாற்றுவது தான் துரோகம் அதுதான் என் வாழ்க்கையில் நடந்தது என்று கனத்த குரலில் தெரிவித்தார். இதனை பார்த்த ரசிகர்கள் கண்ணே கலங்குது என்று கருத்துக்களில் தெரிவித்து வருகின்றன.