ஆழ்வார்பேட்டையில் மரம் விழுந்து விபத்து.. நூலிழையில் உயிர் தப்பிய தமிழ் நடிகர் !
தமிழகம் முழுவதும் பரவலாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்ததை அடுத்து பல பகுதிகளில் சாலைகளில் மழை நீர் தேங்கியதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக களத்தில் இறங்கி மழைநீரை சாலையில் இருந்து வெளியேற்றி போக்குவரத்தை ஒழுங்கு செய்தனர்.
இந்நிலையில், கமல்ஹாசன் அவர்களின் அலுவலகம் இருக்கும் ஆழ்வார்பேட்டை அருகே விபத்து ஒன்று நேரிட்டதாகவும் அந்த விபத்தில் நூலிழையில் உயிர் பிழைத்த தாகவும் தமிழ் நடிகர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
நேற்று காவேரி மருத்துவமனை, கமல்ஹாசனின் அலுவலகம் இருக்கும் சந்திப்பில் திடீரென ஒரு மரம் சாய்ந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் மரம் விழுந்த இந்த விபத்திலிருந்து நூலிழையில் தப்பியதாக நடிகரும் தயாரிப்பாளருமான நிதின் சத்யா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். எனவே சென்னை மக்கள் மிகவும் பாதுகாப்புடன் பயணம் செய்யுமாறும் அவர்கள் அறிவுறுத்தி உள்ளார்.
Chennai city jammed with heavy rains!!! Just missed a tree fall close to kauvery,Samco RKFI junction. Stay safe people!!! @ChennaiRains
— Nitinsathyaa (@Nitinsathyaa) August 21, 2022