சினிமாவில் இருந்து விடைபெறும் நாசர் ? இதய பாதிப்பு காரணமா.?

Actor nassar to quit acting information getting viral on social media

பாலச்சந்தர் இயக்கத்தில் கல்யாண அகதிகள் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் நாசர். அதனைத் தொடர்ந்து, வேலைக்காரன், வண்ண கனவுகள், கவிதை பாட நேரமில்லை போன்ற திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

Actor nassar to quit acting information getting viral on social media

தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி போன்ற அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தமிழ் மொழியில், தேவர் மகன், பாம்பே, ரோஜா, இருவர், ஜீன்ஸ், போக்கிரி, பாகுபலி போன்ற திரைப்படங்களில், இவர் நடித்த கதாபாத்திரங்கள் பெரிதும் பேசப்பட்டது.

Actor nassar to quit acting information getting viral on social media

இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில் 2வது மகன் சைவம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 3வது மகன், கடாரம் கொண்டான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நாசர் நடிகர் என்பதை தாண்டி டைரக்டர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர், டப்பிங் கலைஞர், நடிகர் சங்க தலைவர், அரசியல்வாதி என பல முகங்களைக் கொண்டு விளங்கி வருகிறார்.

Actor nassar to quit acting information getting viral on social media

இன்றுவரை தன்னுடைய எதார்த்தமான நடிப்பினால் ரசிகர்களை கட்டி போட்டவர். சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும், கமலின் மக்கள் நீதி மய்ய கட்சியிலும் இணைந்து பணியாற்றி வந்தார். இவரது மனைவி கமல் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டார். நாசர் தற்போது இரண்டாவது முறையாக நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்று தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார்.

Actor nassar to quit acting information getting viral on social media

இந்நிலையில், நடிப்பில் இருந்து விலக நாசர் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா தொற்று காலத்தில் இதய பாதிப்புகளால் நாசர் கடுமையாக அவதிப்பட்டு, அதற்கான சிகிச்சை எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

Actor nassar to quit acting information getting viral on social media

இதனால், தன்னுடைய உடல்நிலையை கருத்திக் கொண்டு தான் நாசர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. இதனால் திரையுலகினர் மட்டுமின்றி அவரது ரசிகர்களும் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். அதே சமயம் நாசரின் உடல்நிலை விரைவில் குணமடைந்து, அவர் மீண்டும் நடிப்பிற்கு திரும்பி வர அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Share this post