Viral Video: 'தளபதி67' பட ரகசியத்தை பேட்டியில் உளறிய பிரபல நடிகர்.. குஷியான விஜய் ரசிகர்கள்

actor naren opens up about thalapathy67 movie interview video getting viral on social media

மாநகரம், கைதி போன்ற வெற்றி திரைப்படங்களை தந்து திரையுலகை தன் வசம் திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இதனைத் தொடர்ந்து, இவருக்கு விஜய் வைத்து படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. விஜய், மாளவிகா மோஹனன், சாந்தனு, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் மாஸ்டர் திரைப்படத்தை இயக்கினார். இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.

actor naren opens up about thalapathy67 movie interview video getting viral on social media

இதனைத் தொடர்ந்து, இவர் இயக்கத்தில், கமல் ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் விக்ரம் படத்தை உருவாக்கி இருந்தார். இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. விக்ரம் படத்தில் கைதி படத்தின் கனெக்‌ஷன் வைத்து தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றார் லோகேஷ் கனகராஜ். திரையரங்குகளில் திரைப்படம் பெரும் வசூல் வேட்டையில் ஈடுபட்டு ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்றது.

actor naren opens up about thalapathy67 movie interview video getting viral on social media

விஜய் தற்போது நடித்து வரும் வாரிசு படத்தை தொடர்ந்து, விஜய் மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி67 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கான ஸ்கிரிப்ட் தயார் செய்யும் பணியில் முழுவீச்சில் இறங்கி உள்ளார். இப்படத்தில் அவருடன் இயக்குனர்கள் ரத்னகுமார் மற்றும் தீரஜ் வட்டி ஆகியோரும் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

actor naren opens up about thalapathy67 movie interview video getting viral on social media

தளபதி 67 கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட படமாக தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் மெயின் வில்லனாக நடிகர் சூர்யா நடிக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இப்படத்தையும் தனது LCUவின் கீழ் எடுக்க லோகேஷ் முடிவு செய்துள்ளதாகவும், அதனால் இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக சூர்யாவின் ரோலெக்ஸ் கதாபாத்திரமும் இடம்பெறும் என்றும் கூறப்பட்டது.

actor naren opens up about thalapathy67 movie interview video getting viral on social media

விக்ரம் படத்தில் சூர்யா ரோலெக்ஸாக நடித்த 5 நிமிட காட்சிக்கே அரங்கம் அதிர்ந்த நிலையில், தற்போது விஜய்க்கு வில்லனாக அவர் நடிக்க உள்ளதாக பரவும் தகவல் தளபதி 67 படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

actor naren opens up about thalapathy67 movie interview video getting viral on social media

இது அனைத்தும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், பிரபல நடிகரான நரேன் தளபதி 67 படத்தைப்பற்றிய ஒரு தகவலை கசிய விட்டுள்ளார். லோகேஷின் இயக்கத்தில் வெளியான கைதி, விக்ரம் படத்தில் நடித்த நரேன் மலையாள சானல் ஒன்றிற்கு பேட்டி கொடுத்துள்ளார். அப்போது தளபதி 67 படத்தைப்பற்றி அவர் பேசியதாவது, தளபதி 67 கண்டிப்பாக LCU வகையில் தான் இருக்கும். ஆனால் அப்படத்தில் நான் நடிக்கவில்லை என கூறியுள்ளார். இந்த தகவல் தான் தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகின்றது குறிப்பிடத்தக்கது.

Share this post