வெளியில் அழகாக தெரிவது வாழ்க்கையை மாற்றாது; தனுஷ் பகிர்ந்த ஃபோட்டோ; வாழ்த்திய நெட்டிசன்கள்
வெளியில் தெரியும் அழகான தோற்றம் வாழ்க்கையை மாற்றாது, உள்ளே அழகாக உணரும் வாழ்க்கையை உருவாக்குங்கள்… எனக்கு நிச்சயதார்த்தம்! ” என்று கேப்ஷன் கொடுத்திருக்கிறார் தனுஷ்.
சில தினங்களுக்கு நடிகர் நெப்போலியன் முதலமைச்சர் மு க ஸ்டாலினை சந்தித்து தனது மூத்த மகன் தனுஷ் நிச்சயதார்த்த பத்திரிக்கையை கொடுத்திருந்தார் அதுபோல தன்னுடைய மகன் அக்ஷயா என்ற பெண்ணை திருமணம் செய்ய போகிறார் என்ற மகிழ்ச்சி செய்தியையும் ரசிகர்களிடம் பகிர்ந்து இருந்தார்.
இந்த நிலையில் நெப்போலியன் மூத்த மகன் தனுஷ் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் தன்னுடைய எங்கேஜ்மென்ட் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.தன்னுடைய தம்பி குணா மற்றும் தன்னுடைய அம்மா உடன் இருக்கும் புகைப்படங்களை அதில் பகிர்ந்து இருக்கிறார்.பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Share this post