பில்கேட்ஸ் உடன் பிரபல நடிகர் திடீர் சந்திப்பு.. இணையத்தை ஸ்தம்பிக்க வைக்கும் வைரல் போட்டோ

Actor mahesh babu meets bill gates photo getting viral on social media

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவர் நடிப்பில் அண்மையில் சர்காரு வாரிபாட்டா என்ற திரைப்படம் வெளியானது. பரசுராம் இயக்கிய இப்படத்தில் நடிகர் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இதையடுத்து நடிகர் ராஜமவுலி இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார் மகேஷ் பாபு.

Actor mahesh babu meets bill gates photo getting viral on social media

பாகுபலி, ஆர்.ஆர்.ஆர் என அடுத்தடுத்து பிரம்மாண்ட வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக வலம் வரும் ராஜமவுலி, அடுத்ததாக மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றுவது இதுவே முதன்முறை. இந்த படமும் மிகப் பிரம்மாண்டமாக உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.

Actor mahesh babu meets bill gates photo getting viral on social media

இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர் மகேஷ் பாபு, உலக பணக்காரர்களில் ஒருவரும், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவருமான பில் கேட்ஸை சந்தித்து அவருடன் போட்டோவும் எடுத்துள்ளார். இந்த தருணத்தின் போது மகேஷ் பாபுவின் மனைவி நம்ரதாவும் உடன் இருந்தார்.

Actor mahesh babu meets bill gates photo getting viral on social media

இந்த சந்திப்பு குறித்து நடிகர் மகேஷ் பாபு கூறியதாவது : “பில்கேட்ஸை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. இந்த உலகம் கண்ட மிகப் பெரிய தொலைநோக்கு பார்வையை கொண்டவர் பில்கேட்ஸ். மிகவும் பணிவான மனிதர்” என பதிவிட்டுள்ளார். இவர்கள் சந்தித்தபோது எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

Actor mahesh babu meets bill gates photo getting viral on social media

Share this post