நடிகர் லோகேஷின் இறுதி சடங்கில் அவரின் மனைவி செய்த காரியம்.. ச்சே இப்டியும் செய்வாங்களா ? குடும்பத்தினர் வருத்தம்!
90ஸ் கிட்ஸால் மறக்க முடியாத ஒரு சில சீரியல் தொடர்களில் ஜீ பூம் பா மற்றும் மர்மதேசம் பிரபலம் வாய்ந்தது. இன்றளவும் இந்த தொடர்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது. குழந்தைகளை கவரும் வகையில் எடுக்கப்பட்ட இந்த தொடர்களில் நடித்த குழந்தை நட்சத்திரங்கள் பலரும் இன்று சினிமாவில் கலக்கி வருகின்றனர்.
மர்மதேசம் தொடரில் குட்டி ராசுவாக நடித்து அசத்தியவர் லோகேஷ். இவர் ஜீ பூம் பா தொடர் மூலம் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார். இவருக்கு நடிப்பை விட டைரக்ஷனில் ஆர்வம் இருந்ததால் அது சம்பந்தமான வேலைகளை செய்து வந்தார். சில குறும்படங்களையும் இயக்கி வெளியிட்டார். அதற்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பும் கிடைத்தது.
லோகேஷ், விரைவில் சினிமாவில் இயக்குனராக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளது அனைவரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அவரது தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சினிமாவில் இயக்குனர் ஆக வேண்டும் என்கிற கனவோடு இருந்த லோகேஷின் இந்த திடீர் தற்கொலை முடிவு அவரது நண்பர்களையும், உறவினர்களையும் மீளா துயரத்தில் ஆழ்த்தி உள்ளது.
கடந்த அக்டோபர் 2ம் தேதி கோயம்பேடு பேருந்து நிலையத்தில், லோகேஷ் மயங்கிய நிலையில் கிடந்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, அவரை மீட்ட போலீசார் அவர் விஷம் அறிந்து மயங்கி கிடப்பதை அறிந்து உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உடனடியாக இவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தபோதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனையில் இருந்து அளிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் கோயம்பேடு சி.எம்.பி.டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் லோகேஷ் திருமணமாகி விவாகரத்தான நிலையில், காஞ்சிபுரத்தில் தனது தாயுடன் வசித்து வந்தது, பின்னர் பின்னர் இவருடைய பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்ட போது லோகேஷ் குடும்ப பிரச்சனை காரணமாக மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் விவாகரத்திற்கு மனைவி நோட்டீஸ் அனுப்பி நிலையில், மன உளைச்சலில் இருந்த லோகேஷ் தற்கொலை செய்துகொண்டதாக அவரது தந்தை கூறியுள்ளார்.
கடந்த 2011ம் ஆண்டு அனிஷா என்ற பெண்ணை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு முற்றியதால், லோகேஷின் மனைவி அனிஷா அவரிடம் இருந்து பிரிந்து சென்று விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது லோகேஷுக்கு மிகவும் மன உளைச்சலை ஏற்படுத்தியது.
இதன் காரணமாகவே லோகேஷ் தற்கொலை முடிவை எடுத்துள்ளார் என சொல்லப்படுகிறது. மேலும் இவர் தற்கொலை செய்து கொண்டது கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு என்பதால், தற்கொலைக்கு முன்னர் மனைவியை சந்தித்தாரா? இருவருக்குள்ளும் மீண்டும் ஏதேனும் பிரச்சனைகள் வந்ததா..? இருவருக்கும் இடையே பிரச்னை வர காரணம் என்ன ? பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
இந்நிலையில், லோகேஷை பிரிந்து வாழும் மனைவி அனிஷா, யாரோ போல வந்து லோகேஷின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு அவரது உடல் தனக்கு வேண்டாம் என்று தடையில்லாச் சான்றிதழ் எழுதிக் கொடுத்து விட்டுச் சென்றதாக லோகேஷின் தந்தை வருத்தத்துடன் கூறியுள்ளார்.