காரில் அதிவேகமாக சென்று போலீசிடம் சிக்கிய நடிகர் கார்த்தி.. வைரலாகும் பேட்டி வீடியோ !

Actor karthi caught with police for fast car riding

அமீர் இயக்கத்தில் வெளியான பருத்திவீரன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. இப்படத்தை தொடர்ந்து, ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மஹான் அல்ல, சிறுத்தை,கோ, சகுனி, தோழா, மெட்ராஸ் போன்ற பல வெற்றி திரைப்படங்களை தந்ததன் மூலம் தமிழ் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறியுள்ளார்.

Actor karthi caught with police for fast car riding

கைதி, தம்பி, சுல்தான் போன்ற திரைப்படங்களை தொடர்ந்து, தற்போது விருமன், சர்தார், பொன்னியின் செல்வன் 1 போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். நடிகர் கார்த்தி அதிவேகமாக காரில் சென்று போலீசிடம் சிக்கி, நீதிமன்றம் வரை சென்று ஃபைன் கட்டியது குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Actor karthi caught with police for fast car riding

நடிகர் கார்த்தி நடிக்க வருவதற்கு முன், USல் வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது ஒரு நாள் நண்பர்களுடன் விடுமுறை நாளை கொண்டாட வெளியே சென்றுள்ளாராம். ஒரு காரில் சில நண்பர்களும் மற்றொரு காரில் கார்த்தி மற்றும் சில நண்பர்களும் சென்றுள்ளார்கள். அப்போது நண்பர்கள் அனைவரும் இணைந்து கார் ரேஸில் ஈடுபட்டுள்ளனர்.

Actor karthi caught with police for fast car riding

அவர்கள் சென்ற சாலை அதிகபட்சம் 55 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும். ஆனால், இவர்கள் 90 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றதால், போலீஸ் உடனடியாக இவர்களை கைது செய்து, நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர். அதன்பின், நீதிபதியின் உத்தரவின்படி $250 டாலர் ஃபைன் கட்டிவிட்டு வெளியேறியுள்ளார்கள். இந்த தகவலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பேட்டி ஒன்றில் நடிகர் கார்த்தி வெளிப்படையாக கூறியுள்ளார்.

Share this post