நடிகர் ஜெய்க்கு விரைவில் திருமணம்.. பொண்ணு அவங்களும் இல்ல இவங்களும் இல்ல.. பார்ட்டியுடன் ஜெய் சொன்ன ஹாப்பி நியூஸ் !
விஜய் நடிப்பில் வெளியான பகவதி படத்தில் விஜய் தம்பியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் ஜெய். இதனைத் தொடர்ந்து, வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகி ஹிட் அடித்த சென்னை 600 028 படத்தில் நடித்திருந்தார்.
பின்னர், சசிகுமார் இயக்கத்தில் வெளியாகி செம ஹிட் அடித்த சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் மூலம் மிக பிரபலம் அடைந்து தமிழ் திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தார். இதனைத் தொடர்ந்து, கோவா, எங்கேயும் எப்போதும், ராஜா ராணி, வடகறி, திருமணம் என்னும் நிக்காஹ், பட்டாம்பூச்சி போன்ற பல பிரபல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில், இவர் நடிப்பில் வெளியான குற்றமே குற்றம் திரைப்படத்திற்கு பிறகு, எண்ணி துணிக, காபி வித் காதல் போன்ற பல திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.
இதற்கு நடுவே, ஒரு சில திரைப்படங்களில் ஒன்றாக பணியாற்றியதன் காரணமாக ஜெய் - அஞ்சலி காதலில் இருப்பதாகவும், விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இதற்கு தகுந்தாற்போல், இருவரும் ஒன்றாக இருந்து வந்த சில செய்திகள் இணையத்தில் உலா வந்தன.
தற்போது, வாணி போஜனுடன் ஜெய் காதலில் இருப்பதாக செய்திகள் உலா வருகிறது. வெள்ளித்திரையில் வளர்ந்து வரும் வாணி போஜனிடம் கதை சொல்ல இயக்குனர் ஒருவர் சென்றபோது, வாணி போஜனுடன் நடிகர் ஜெய் இருந்துள்ளார். இதனால், இவர்கள் இருவரும் காதலிப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், அதனை மறுக்கும் வகையில் வாணி போஜன் முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்நிலையில், விரைவில் ஜெய்க்கு திருமணம் நடக்கவிருப்பதாகவும், அதற்கு ஜெய் பச்சை கொடி காமித்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து, சென்னை 600 028 பட நண்பர்களுடன் பார்ட்டி கூட நடந்ததாக சொல்லப்படுகிறது.