அஞ்சலியை தொடர்ந்து பிரபல தமிழ் நடிகையுடன் நெருக்கம் காட்டும் நடிகர் ஜெய் ? இணையத்தில் தீயாய் பரவும் தகவல் !

விஜய் நடிப்பில் வெளியான பகவதி படத்தில் விஜய் தம்பியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் ஜெய். இதனைத் தொடர்ந்து, வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகி ஹிட் அடித்த சென்னை 600 028 படத்தில் நடித்திருந்தார்.
பின்னர், சசிகுமார் இயக்கத்தில் வெளியாகி செம ஹிட் அடித்த சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் மூலம் மிக பிரபலம் அடைந்து தமிழ் திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தார். இதனைத் தொடர்ந்து, கோவா, எங்கேயும் எப்போதும், ராஜா ராணி, வடகறி, திருமணம் என்னும் நிக்காஹ், பட்டாம்பூச்சி போன்ற பல பிரபல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில், இவர் நடிப்பில் வெளியான குற்றமே குற்றம் திரைப்படத்திற்கு பிறகு, எண்ணி துணிக, காபி வித் காதல் போன்ற பல திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.
இதற்கு நடுவே, ஒரு சில திரைப்படங்களில் ஒன்றாக பணியாற்றியதன் காரணமாக ஜெய் - அஞ்சலி காதலில் இருப்பதாகவும், விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இதற்கு தகுந்தாற்போல், இருவரும் ஒன்றாக இருந்து வந்த சில செய்திகள் இணையத்தில் உலா வந்தன.
தற்போது, வாணி போஜனுடன் ஜெய் காதலில் இருப்பதாக செய்திகள் உலா வருகிறது. ஜெய் மூலம் நடிகை வாணி போஜன் தற்போது சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார். அதாவது, சிறந்த படங்கள் மூலம் வெள்ளித்திரையில் வளர்ந்து வரும் வாணி போஜனிடம் கதை சொல்ல இயக்குனர் ஒருவர் சென்றபோது, வாணி போஜனுடன் நடிகர் ஜெய் இருந்துள்ளார்.
ஒரு முறை அல்ல 2 முறை அல்ல 4 முறை வாணி போஜனிடம் கதை சொல்ல சென்ற போதெல்லாம் வாணி போஜனுடன் ஜெய் இருப்பதை பார்த்த இயக்குனர் கதை சொல்லாமல் வந்துவிடுகிறாராம்.
இதே போல் தான் நடிகர் ஜெய் சில வருடங்களுக்கு முன் நடிகை அஞ்சலிடம் நடந்துகொண்டார். படப்பிடிப்பில் இருக்கும் போது, இந்த காட்சியில் அஞ்சலி இப்படி நடிக்க மாட்டார், அப்படி நடிக்க மாட்டார் என்று சொல்லி சொல்லியே அஞ்சலியின் மார்க்கெட் சரிந்ததாக கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
தற்போது வாணி போஜன் கதை கேட்கும் பொழுது ஜெய் பக்கத்தில் இருந்தால், அது வாணி போஜனின் எதிர்கால சினிமா வாழ்க்கைக்கு ஒரு மைனஸ் தான் என்று பேசப்படுகிறது.