விஜய் இடத்தை சிவகார்த்திகேயன் பிடித்துவிட்டார்..! நான் சொன்னது இது இல்லை..! SJ சூர்யா விளக்கம்

இயக்குனராக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த முதல் படத்திலேயே தல அஜித்தை வைத்து வாலி என்ற திரைப்படத்தை இயக்கி சூப்பர் ஹிட் கொடுத்தவர் நடிகரும் இயக்குனருமான எஸ் ஜே சூர்யா. இதைத்தொடர்ந்து எஸ் ஜே சூர்யா இயக்கிய குஷி திரைப்படம் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தது.
இந்தப் படத்திற்கு பிறகு எஸ் ஜே சூர்யா படத்தை இயக்கியும் நடிக்கவும் துவங்கினார். எனவே அவருடைய நடிப்பில் வியாபாரி, நியூ, இசை போன்ற திரைப்படங்கள் வெளிவந்தது. அதன் பிறகு ஸ்பைடர், மெர்சல் போன்ற படங்களில் மிரட்டும் வில்லனாக தோன்றி ரசிகர்களை அலற விட்டிருப்பார்.அவர் நடித்த மாநாடு படம் மிகப்பெரிய ஹிட் ஆனாது. அதில் போலீஸ் ரோலில் அதிகம் வில்லத்தனத்துடன் அவர் நடித்திருந்தது ரசிகர்களை கவர்ந்தது.
லைகா ப்ரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, ஷிவாங்கி, ஆர் ஜே விஜய், பாலா சரவணன், ராஜு, ஷாரிக் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் டான்.அதன் ப்ரோமோஷனுக்காக SJ சூர்யா பேட்டி அளித்து இருக்கிறார்.
விஜய் இடத்தை சிவகார்த்திகேயன் பிடித்துவிட்டார் என்று அவர் கூறியதாக வார இதழின் ட்விட்டர் கணக்கில் வீடியோ வெளியிட்டுள்ளனர். அதை பார்த்து அதிர்ச்சியான SJ சூர்யா, அதற்கு தற்போது விளக்கம் கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்திலும் விஜய்க்கு ஒரு ஸ்பெஷல் இடம் கொடுத்திருக்கிறார்கள், அதே போல சிவகார்த்திகேயனுக்கும் கொடுக்கிறார்கள்” என்று தான் சொன்னேன் என விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
நான் சொன்னது இதுதான் இப்படி ஒரு தலைப்பை எதிர்பார்க்கவில்லை” என அவர் குறிப்பிட்டு உள்ளார்.
“ Every families in Tamil Nadu given a special place to @actorvijay sir and to @Siva_Kartikeyan sir “ this is what I told …. I didn’t expect such a caption from @CinemaVikatan 🙄🙄🙄 https://t.co/tyhbXfCZVE
— S J Suryah (@iam_SJSuryah) April 29, 2022