கனா காணும் காலங்கள் தொடரில் விஜய் சேதுபதி ? வைரலாகும் போட்டோ.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்
பெரிய பிரபலங்கள் படத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் நடிகராக அறிமுகமானார்.
பின்னர், பீஸ்சா, நானும் ரவுடி தான், இமைக்கா நொடிகள் போன்ற பல திரைப்படங்களில் மக்களை ஈர்க்கும் கதையில் பிடித்தமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் ஆகி, தற்போது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் மக்கள் செல்வனாக உருவாகியுள்ளார்..
எந்த விதமான கதைகளிலும் தயக்கம் காட்டாது நடித்து வரும் விஜய் சேதுபதி, இவர் நடிக்கும் முக்கால்வாசி திரைப்படங்கள் வெற்றி படங்களாகவே அமைந்து விடுகிறது.
தற்போது, 2 ஹீரோ சப்ஜெக்டிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், விக்ரம் வேதா, பேட்ட, மாஸ்டர்,மேலும், தற்போது வெளியாகி வேற லெவல் மாஸ் காட்டி வரும் விக்ரம் படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்ததது என கெத்து காட்டி வருகிறார்.
காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் 2 பெரிய ஹீரோயின்களுடன் ரொமான்ஸ் செய்த விஜய் சேதுபதி, விக்ரம் படத்தில் சந்தானம் என்ற போதை கடத்தல் ஏஜண்ட் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.
தற்போது, சீனு ராமசாமி இயக்கத்தில் மாமனிதன் திரைப்படத்தில் நடித்து அப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், வெள்ளித்திரையை போல இப்போது சின்னத்திரைக்கு ஒரு விஜய் சேதுபதி வந்துள்ளார். அவரைப் போலவே அச்சு அசல் விஜய் சேதுபதி போலவே இருக்கும் ஒரு நபர் தற்போது கனா காணும் காலங்கள் தொடரில் நடித்து வருகிறார்.
2006ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர்களில் டிஆர்பி டாப்பில் இருந்த தொடர் கனா காணும் காலங்கள். பள்ளியில் மாணவ-மாணவிகள் மத்தியில் நடக்கும் சம்பவங்கள் அடிப்படையில் திரைக்கதை எடுக்கப்பட்டிருந்தது.
மேலும், இந்த தொடருக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை மற்றும் கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை என்ற தொடர்கள் ஒளிபரப்பானது.
இந்த இரு தொடர்களும் வெற்றி தொடராக அமைந்தது. அதோடு இந்த தொடரில் நடித்த பல்வேறு நடிகர், நடிகைகள் தொலைக்காட்சிகளிலும், வெள்ளித்திரையிலும் பிரபலமானவர்களாக திகழ்ந்து வருகிறார்கள்.
தற்போது கனா காணும் காலங்கள் தொடரின் இரண்டாவது சீசன் டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இந்த சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. இந்த தொடரில் டிக் டாக் பிரபலங்கள் பலருக்கு வாய்ப்பு கொடுத்து வருகின்றனர்.
அதில் ஒருவர் தான் பரத். இந்த தொடரில் இவர் குணா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதுவும் இவர் டீச்சரைக் காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. தற்போது இவரை பலரும் சின்னத்திரையின் விஜய் சேதுபதி என்று கூறி வருகின்றனர். இவர் பார்ப்பதற்கு விஜய் சேதுபதி போல் இருக்கிறார் என்று கூறி வருகிறார்.
அதோடு விஜய் சேதுபதியை புகைப்படத்தையும் இவருடைய புகைப்படத்தையும் ஒப்பிட்டு சோசியல் மீடியாவில் புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்கள். இதை பார்த்த பலரும் டிக் டாக்கில் கூட இவர் நிறைய விஜய் சேதுபதி டயலாக் பேசி இருக்கிறார் என்றெல்லாம் கூறி வருகின்றனர். தற்போது இவரை பற்றிய கமெண்ட்ஸ் தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.