ஐதராபாத் ஷூட்டிங்கில் அஜித்தை மீட் பண்ணி போட்டோ எடுத்த ஹீரோ.. வைரலாகும் பிக் !

Actor aadhi met ajith in hyderabad and took photo getting viral on social media

வலிமை திரைப்படத்தை தொடர்ந்து போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகவிருக்கும் திரைப்படம் AK61. இப்படம் குறித்து பல விதமான தகவல் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. அதாவது, அஜித் இப்படத்தில் இரு வேடத்தில், ஹீரோ மற்றும் வில்லன் ரோலில் பல ஆண்டுகள் கழித்து நடிப்பதாக சொல்லப்படுகிறது.

இப்படத்தின் ப்ரீ-production வேலைகள் விரைவாக நடந்து வருகிறது. ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் இப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருவதாக தெரிகிறது.

இப்படம் பிரபல வெப் சீரிஸ் ‘மணி ஹெய்ஸ்ட்’ போல வங்கி கொள்ளை சம்மந்தமாக இத்திரைக்கதை உருவாகவுள்ளதாக தகவல் வெளியானது.

Actor aadhi met ajith in hyderabad and took photo getting viral on social media

இப்படத்தில் சண்டைக்காட்சிகள் என தனியே ஏதும் இல்லது ஹீரோக்கும், வில்லனுக்குமான டெக்னிக்கல் சண்டையாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இதில் கதாநாயகியாக தபு, ராகுல் ப்ரீத் சிங் நடிப்பதாக தகவல்கள் உலா வந்தது.

தற்போது, பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் நாயகியாக ஒப்பந்தமாகி இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும், இப்படத்தில் ‘சர்பட்ட பரம்பரை’ படத்தில் வில்லனாக நடித்த ஜான் கொக்கன், சமுத்திரக்கனி ​​மற்றும் ராஜதந்திரம் படத்தின் ஹீரோ வீரா ஆகியோர் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

இப்படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் அஜித் நடித்து வருகிறார் என சொல்லப்பட்டு வந்த நிலையில், அவரது ஒரு கெட்டப் நீண்ட தாடியுடன் கூலர்ஸ் அணிந்தபடி காணப்படுகிறது. இதன் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் நடிகர் ஆதி ஹைதராபாத் சூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் அஜித்தை சந்தித்துள்ளார்.

ஆதி அவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ள நிலையில், அஜித்தை நேரில் சந்தித்து அவர் அழைப்பிதழ் கொடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படமும் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Actor aadhi met ajith in hyderabad and took photo getting viral on social media

Share this post