நிக்கி கல்ராணி கர்ப்பம்? நிக்கி கல்ராணியின் பதிவால் வாழ்த்து கூறி வரும் ரசிகர்கள்!

actor aadhi and nikki galrani soon to be parents post getting viral

மிருகம் என்னும் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஆதி. இதனைத் தொடர்ந்து ஈரம், அரவான் போன்ற பல பிரபலமான திரைப்படங்களில் நடித்து வந்தார். சுமாரான அளவிற்கு படங்கள் இருந்தாலும் இவருக்கென தனி வரவேற்பு மக்கள் மத்தியில் தற்போதும் இருந்து வருகிறது.

actor aadhi and nikki galrani soon to be parents post getting viral

நிக்கி கல்ராணி, ஜீ.வி பிரகாஷ் நாயகனாக நடித்த படமான டார்லிங் மூலம் அறிமுகமானார். வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், கோ 2 மற்றும் கலகலப்பு 2 போன்ற படங்களின் மூலம் நல்ல பிரபலம் ஆனார்.

actor aadhi and nikki galrani soon to be parents post getting viral

மரகத நாணயம் படத்தில் உடன் நடித்த போது நிக்கி கல்ராணி உடன் காதல் ஆனதால், இருவீட்டாரின் சம்மதத்தின் பெயரில், மார்ச் 24ம் தேதி நடிகை நிக்கிக்கும் ஆதிக்கும் சென்னையில் உள்ள நிக்கி கல்ராணி வீட்டில் நெருங்கிய திரையுலக நண்பர்கள் கலந்து கொள்ள சிம்பிளாக நிச்சயதார்த்தம் செய்தனர்.

actor aadhi and nikki galrani soon to be parents post getting viral

கடந்த மே 18ம் தேதி திருமணம் நடைபெற்றது. இதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்தது. திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்து மழையை பொலிந்து வந்தனர். அதனைத் தொடர்ந்து, திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் சென்னையில் நடத்தப்பட்டது. ஆதியும், நிக்கி கல்ராணியும் திருமணத்திற்கு பின் பாரிஸுக்கு ஹனிமூன் கொண்டாட சென்றிருந்தனர்.

actor aadhi and nikki galrani soon to be parents post getting viral

அப்போது அங்குள்ள ஈபிள் டவர் முன் இருவரும் ஜோடியாக எடுத்த ரொமாண்டிக் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. திருமணத்திற்கு பிறகு, நிக்கியின் நடிப்பு குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில், ஆதி - நிக்கி கல்ராணி ஜோடி குறித்து ஒரு தகவல் கோலிவுட் வட்டாரத்தில் தீயாய் பரவி வருகிறது.

actor aadhi and nikki galrani soon to be parents post getting viral

அது என்னவென்றால், நடிகை நிக்கி கல்ராணி கர்ப்பமாக உள்ளார் என்பது தான். விரைவில் ஆதி - நிக்கி கல்ராணி ஜோடி பெற்றோர் ஆக இருப்பதாக தகவல் பரவி வருகிறது. ஆனால் இதுகுறித்து அவர்கள் தரப்பில் இருந்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. நடிகை நிக்கி கல்ராணி சமீபகாலமாக எந்த படத்திலும் நடிக்க கமிட் ஆகவில்லை என்பதால் இந்த தகவல் உண்மையாக இருக்க அதிக வாய்ப்புள்ளது.

actor aadhi and nikki galrani soon to be parents post getting viral

Share this post