"சம்பவம்" ! 'பீஸ்ட்' Climax குறித்து ட்வீட் போட்ட அபிஷேக் ராஜா !

Abishek raja tweets about beast climax getting viral

விஜே மற்றும் நடிகராக வலம் வருபவர் அபிஷேக் ராஜா. திரைப்படங்கள் மற்றும் நடிகர் நடிகைகள் குறித்து இவர் பேசும் சில வீடியோக்கள் இணையத்தில் ட்ரெண்ட் ஆவது வழக்கம். குறிப்பாக படத்தின் மறைமுகமான கருத்தை எடுத்துரைப்பது, நடிகர் நடிகைகள் குறித்து பேசுவது என ஏராளம்.

Abishek raja tweets about beast climax getting viral

இவர் இமைக்க நொடிகள் திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதன் பிரபலம் மூலம், கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் இவரை பற்றி கலவையான விமர்சனங்களும், கருத்துக்களும் வெளியானது. இவருக்கு திருமணம் ஆகி, கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர்.

இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டு தனது பணிக்கு திரும்பிய அபிஷேக், தற்போது விஜய் நடிப்பில் வெளியாகவிருக்கும் பீஸ்ட் படம் குறித்து பதிவிட்ட ட்வீட் செம வைரல் ஆகி வருகிறது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான பீஸ்ட் திரைப்படத்தில் விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படம் வரும் ஏப்ரல் 13ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், பீஸ்ட் படத்தின் க்ளைமாக்ஸ் சூப்பர் என்பதை போல இவர் பதிவிட்டுள்ள ட்வீட் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Abishek raja tweets about beast climax getting viral

Share this post