சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிக்பாஸ் அபிராமி.. ஆரம்பமே அமர்க்களமா இருக்கே..!

abhirami-venkatachalam-new-entry-in-serials

ஒரு சில படங்களில் மட்டும் நடித்திருந்தாலும் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனவர் நடிகை அபிராமி வெங்கடாச்சலம். இவர் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இவர் பிக்பாஸ் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

abhirami-venkatachalam-new-entry-in-serials

இவர் திரைப்பட நடிகையாவதற்கு முன்னர் மிகச்சிறந்த பரதநாட்டிய கலைஞர். அவ்வப்போது தனது சமூகவலைத்தளத்தில் பரதநாட்டியம் ஆடும் புகைப்படங்களை கூட வெளியிடுவார். சில மாதங்களுக்கு முன்னர் கூட கலாஷேத்ரா ஆசிரியர்கள் மீது மாணவிகள் அளித்த பாலியல் புகாரை எதிர்த்து ஆசியர்களுக்கு ஆதரவாக பேசினார் அபிராமி.

abhirami-venkatachalam-new-entry-in-serials

தொடர்ந்து கிடைக்கும் படத்தில் நடித்துக்கொண்டு வரும் அபிராமி. வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது. அதாவது, ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் வீரா தொடரில் நடிகை அபிராமி நடிக்க கமிட்டாகி உள்ளாராம். ஆனால், அவர் தொடர் முழுவதும் வர கமிட் ஆனாரா அல்லது சிறப்பு வேடத்தில் நடிக்கிறாரா என்பது குறித்த தகவல் தற்போது வரை வெளியாகவில்லை.

Share this post