‘ஈ ஆரி எச மாரி’ & ‘தீ ஆரி எச மாரி’ – இரண்டுமே இல்ல.. பொன்னி நதி பாடல் குறித்து ஆர் ரஹ்மான் விளக்கம் !
பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு, அதே பெயரில் இரண்டு பாகங்களாக திரைப்படம் இயக்கி வருகிறார் இயக்குனர் மணிரத்னம். இதன் முதல் பாகமான பொன்னியின் செல்வன் 1, உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.
சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், பிரபு, ஜெயராம், விக்ரம் பிரபு, கிஷோர், லால், ரஹ்மான், ஷோபிதா துலிபாலா உள்ளிட்ட பல நட்சத்திர பிரபலங்கள் நடித்துள்ளனர்.
பல ஆண்டுகளாக பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுக்க வேண்டும் என ஏரளமான திரை பிரபலங்கள் கனவு கண்ட நிலையில், அதனை மணிரத்னம் சாதித்துக் காட்டி உள்ளார். மேலும், திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகிய ‘பொன்னியின் செல்வன்’ கதையை, எவ்வளவு நேர்த்தியாக ரசிகர்கள் கண்களுக்கு காட்சிப்படுத்த முடியுமோ, அதனை மிக சிறப்பாக செய்துள்ளார் மணிரத்னம். குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கதாபாத்திரமுமே, கதைக்கு பொருந்தி, அளவான நடிப்பால் அசர வைத்துள்ளனர்.
வசூலையும், பாசிட்டிவ் ரிவ்யூக்களையும் அள்ளி குவித்து வரும் இப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் குரலில் வெளியான பொன்னி நதி பாடல் பட்டிதொட்டியெங்கும் பேமஸ். இந்த பாடலின் உண்மையான அர்த்தம் குறித்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. மேலும், ஈஆரிஎசமாரிக்கும் அர்த்தம் ஈ – வில், அம்பு, ஈட்டி ஆரி-வீரன், எச- இசைமாரி – மழை என்று Rj அஞ்சனா வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
இந்த வீடியோவை பார்த்த பலரும் ‘ஓ இதற்கு இதான் அர்த்தமா’ என்று அந்த வீடியோவை பகிர்ந்து வந்தனர். இப்படி இந்த பாடல் வரிகளுக்கு பலரும் பல அர்த்தங்கள் கூறி வரும் நிலையில், இந்த பாடலை எழுதிய இளங்கோ கிருஷ்ணன் ‘அந்த வரிகளுக்கு எல்லாம் எந்த அர்த்தமும் கிடையாது. எதோ சந்ததிற்கு பொருந்தும்படி எழுதிய வரிகள் தான் அது என்றார். இப்படி ஒரு நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் Dj தீபிகா பொன்னி நதி பாடலை தீம் பார்க் ஒன்றின் நீச்சல் குளம் அருகில் போட்டு வைப் செய்து இருந்தார்.
அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இப்படி ஒரு நிலையில் இந்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் ‘ரீகாரி எசமாரி’ என்று பதிவிட்டுள்ளார். இதனை dj தீபிகாவும் தன் இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்து இருக்கிறார். இதன் மூலம் பொன்னி நதி பாடலில் வந்த அந்த குறிப்பிட்ட கோரஸ் ”‘ஈ ஆரி எச மாரி’ யும் இல்ல ‘தீ ஆரி எச மாரி’ யும் இல்லை என்பது உறுதியாகி இருக்கிறது.
Appo athu 'Ee Aari Esa Maari' Illaya #arrahman sir....ithukku artham ellam oru pulla potuchey...😂😂😂 pic.twitter.com/J7nperDAcl
— chettyrajubhai (@chettyrajubhai) October 11, 2022
பொன்னி நதி பாக்கனுமே… ஈஆரிஎசமாரி🔥👑
— black cat (tribal) (@Cat__offi) September 30, 2022
ஈஆரிஎசமாரி யின் அர்த்தம் தெரியுமா? 🫣
#PonniyinSelvan1
Credits RJ anjana pic.twitter.com/GzigFvquWd