த்ரிஷாவுக்கு முத்தமிட்ட குழந்தை.. ஆனந்தத்தில் கண்ணீருடன் திரிஷாவே வெளியிட்ட வீடியோ!

பிரபல மாடலிங் அழகியான த்ரிஷா, மிஸ் சென்னை போட்டிக்கு பிறகு திரையுலகத்தில் அறிமுகமானார். ஜோடி திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்த த்ரிஷா, மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் செம பேமஸ் ஆனார். தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி திரையுலகில் டாப் நடிகையாக வலம் வருகிறார்.
90ஸ்களில் கனவு கன்னியாக இருந்த இவர், விண்ணைத்தாண்டி வருவாயா, 96, கொடி போன்ற திரைப்படங்கள் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து வருகிறார். விஜய், அஜித், சூர்யா, சிம்பு, ரஜினி, கமல் போன்ற உச்ச நட்சத்திரங்களின் படங்களில் அவர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தற்போது, பொன்னியின் செல்வன் படத்தில் இவரது கதாபாத்திரமும், படத்தின் ப்ரோமோஷன் போது இவர் வந்த புகைப்படங்கள் என இணையத்தில் செம ட்ரெண்ட் ஆனது.
சினிமாவில் மிகப் பிரபலமாக திகழ்ந்து கொண்டிருந்தாலும் இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் திரிஷா அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிடுவது வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் இவர் வெளியிடும் புகைப்படம் மற்றும் வீடியோவிற்கு ரசிகர் பட்டாளம் ஏராளம். இந்நிலையில், சமூக வலைதளமான இன்ஸ்டா பக்கத்தில் 4 மில்லியன் பாலோவ்ஸ்களை பெற்றுள்ளார்.
இந்நிலையில், திரிஷா தன்னுடைய பக்கமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ 3 லட்சம் லைக்ஸ் மேல் பெற்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் திரிஷாவின் புகைப்படத்திற்கு ஒரு சின்ன குழந்தை முத்தம் கொடுப்பது உள்ளது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருவது மட்டுமல்லாமல் பல ரசிகர்கள் லைக்ஸ் போட்டு கமெண்ட் செய்து வருகிறார்கள்.
🥹❤️ pic.twitter.com/NRbX4OesXG
— Kundavai (@trishtrashers) November 19, 2022