'என் பிறந்தநாளுக்கு விஜய் வராத காரணம்'.. விஜய் & விஜய் மக்கள் இயக்கம் பற்றி மனம் திறந்த S A சந்திரசேகர்

Sa chandrasekar opens up about vijay not coming for his birthday video viral

பிரபல இயக்குனர் சந்திரசேகரின் மகன் நமது தற்போதைய தளபதி நடிகர் விஜய். தனது தந்தை இயக்கத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்த இவர், தற்போது ஆல் இந்தியா லெவெலுக்கு பேமஸ். எட்டிப்பிடிக்க இயலாத அளவிற்கு உச்சத்தில் உள்ள விஜய், தனது தந்தை இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான வெற்றி படமான இது நம் நீதி வரை என்னும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

Sa chandrasekar opens up about vijay not coming for his birthday video viral

நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் அறிமுகமான விஜய், 90 களின் பிற்பாதியில் வெளியான படங்கள் பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். அதன்படி யூத், பகவதி, புதிய கீதை, திருமலை,திருப்பாட்சி, சிவகாசி, போக்கிரி போன்ற வெற்றி படங்கள் விஜய்க்கு கைகொடுத்தது. மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

Sa chandrasekar opens up about vijay not coming for his birthday video viral

இப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனைத் தொடர்ந்து, விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் வாரிசு. தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் திரைப்படத்தின் 3 போஸ்டர்கள் விஜயின் பிறந்த நாளன்று வெளியானது.

Sa chandrasekar opens up about vijay not coming for his birthday video viral

இந்த அளவுக்கு விஜய் உயர்வதற்கு முக்கிய காரணமாக அவருடைய உழைப்பு ஒரு பக்கம் இருந்தாலும், அவருடைய தந்தை இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகரும் முக்கிய காரணம். ஆரம்ப காலத்தில் விஜய் தட்டுத்தடுமாறி நடித்து, சுமார் 10 படங்களுக்கு பிறகுதான் தளபதி விஜய் தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் வகுத்தார்.

Sa chandrasekar opens up about vijay not coming for his birthday video viral

இந்நிலையில், தளபதி விஜய்க்கும், எஸ்ஏ சந்திரசேகருக்கும் கடந்த சில ஆண்டுகளாக மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிந்து இருக்கின்றனர். இதற்கு காரணம், தளபதி விஜய்யின் அரசியலில் அவருடைய தந்தையின் குறுக்கீடு இருந்ததால், அதை விரும்பாத விஜய் அதன் பிறகு தந்தையின் செயல்பாடுகள் பிடிக்காததால் விலகி இருக்கிறார் என கூறி வருகின்றனர்.

Sa chandrasekar opens up about vijay not coming for his birthday video viral

கடைசியாக மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில்தான் விஜய் தனது பெற்றோருடன் கலந்து கொண்டார். அதன் பிறகு எஸ்ஏசி மற்றும் விஜய்யை ஒன்றாக எங்கேயும் பார்க்கமுடியவில்லை. இந்நிலையில் எஸ்ஏசி தனது 81வது பிறந்தநாளை விஜய் இல்லாமல் தன்னுடைய மனைவி ஷோபா உடன் கேக் வெட்டி கொண்டாடி இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவுகிறது.

Sa chandrasekar opens up about vijay not coming for his birthday video viral

கூடிய விரைவில் இவர்களுக்கு இடையே இருக்கும் விரிசல் சரியாக வேண்டுமென கோலிவுட் பிரபலங்கள் மட்டுமல்லாமல் ரசிகர்களும் விரும்புகின்றனர். சினிமாவில் கொடிகட்டிப் பறக்கும் தளபதி விஜய் தன்னுடைய குடும்பத்தினரிடமும் நேரம் செலவழித்து அவர்களிடம் இருக்கும் பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என அனைவரும் விரும்புகின்றனர்.

Sa chandrasekar opens up about vijay not coming for his birthday video viral

80 வயதை கடந்த S A சந்திரசேகர் மனைவியுடன் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு தனியே சென்றுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி ஆனது. இந்நிலையில், S A சந்திரசேகர் அளித்த பேட்டியில் இதுவரை சொல்லாத பல தகவல்களை அவர் பேசியுள்ளார். விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்ட பலரும் இன்று சந்திரசேகரை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க வந்தனர்.

Sa chandrasekar opens up about vijay not coming for his birthday video viral

உங்கள் பிறந்தநாளுக்கு விஜய் ஏன் வரவில்லை என்று கேட்டதற்கு, அவருக்கு ஜூலை 2 ஹைதராபாத்தில் ஷூட்டிங் இருந்ததால் ஜூலை 1ம் தேதியே அவர் ஹைதராபாத் சென்று விட்டதாக கூறினார். மேலும் விஜய் மக்கள் இயக்கம் நீர்த்து போய்விட்டது, வலுவிழந்துவிட்டது என்றும் கூறினார். விஜய் மக்கள் இயக்கத்தில் நீக்கப்பட்ட பலரை மீண்டும் இயக்கத்தில் சேர்க்க தான் பாடுபட்டு வருவதாகவும், இது குறித்து விஜயிடம் பேசிய போது நேரம் வரும் போது பார்க்கலாம் என்று விஜய் கூறியதாகவும் சந்திரசேகர் கூறினார்.

Sa chandrasekar opens up about vijay not coming for his birthday video viral

அரசியல் கட்சிக்கு உண்டான தகுதி இருந்த ஒரு அமைப்பாக இருந்தது விஜய் மக்கள் இயக்கம், தேர்தல் நேரங்களில் பல கட்சிகள் தங்களை அணுகியதாகவும் அவர் கூறினார். இப்படி இருந்த இயக்கத்தை காசு கொடுத்தால் மாவட்டத் தலைவர் கிடைக்கும் என்று நிலைமை வந்துவிட்டதாகவும், விஜய் மக்கள் இயக்கம் வலுவிழந்து விட்டதாகவும் அவர் கூறினார்.

Share this post