என்னதான் மகன் வரலனாலும் அவர் பெயரில் அர்ச்சனை செய்த SAC.. திருக்கடையூர் கோயிலில் சிறப்பு யாகபூஜை..
பிரபல இயக்குனர் சந்திரசேகரின் மகன் நமது தற்போதைய தளபதி நடிகர் விஜய். தனது தந்தை இயக்கத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்த இவர், தற்போது ஆல் இந்தியா லெவெலுக்கு பேமஸ்.
எட்டிப்பிடிக்க இயலாத அளவிற்கு உச்சத்தில் உள்ள விஜய், தனது தந்தை இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான வெற்றி படமான இது நம் நீதி வரை என்னும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் அறிமுகமான விஜய், 90 களின் பிற்பாதியில் வெளியான படங்கள் பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். அதன்படி யூத், பகவதி, புதிய கீதை, திருமலை,திருப்பாட்சி, சிவகாசி, போக்கிரி போன்ற வெற்றி படங்கள் விஜய்க்கு கைகொடுத்தது.
மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
இதனைத் தொடர்ந்து, விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் தளபதி66. தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் திரைப்படம் தளபதி66. இப்படத்திற்கு வாரிசு என பெயரிட்டுள்ளனர். இதன் 3 போஸ்டர்கள் விஜயின் பிறந்த நாளன்று வெளியானது.
இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கப்போவதாக தகவல் வெளியானது. விரைவில் இப்படம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவரது 48வது பிறந்த நாளுக்கு கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல்வேறு திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த அளவுக்கு விஜய் உயர்வதற்கு முக்கிய காரணமாக அவருடைய உழைப்பு ஒரு பக்கம் இருந்தாலும், அவருடைய தந்தை இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகரும் முக்கிய காரணம். ஆரம்ப காலத்தில் விஜய் தட்டுத்தடுமாறி நடித்து, சுமார் 10 படங்களுக்கு பிறகுதான் தளபதி விஜய் தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் வகுத்தார். இந்நிலையில், தளபதி விஜய்க்கும், எஸ்ஏ சந்திரசேகருக்கும் கடந்த சில ஆண்டுகளாக மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிந்து இருக்கின்றனர்.
இதற்கு காரணம், தளபதி விஜய்யின் அரசியலில் அவருடைய தந்தையின் குறுக்கீடு இருந்ததால், அதை விரும்பாத விஜய் அதன் பிறகு தந்தையின் செயல்பாடுகள் பிடிக்காததால் விலகி இருக்கிறார் என கூறி வருகின்றனர். கடைசியாக மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில்தான் விஜய் தனது பெற்றோருடன் கலந்து கொண்டார். அதன் பிறகு எஸ்ஏசி மற்றும் விஜய்யை ஒன்றாக எங்கேயும் பார்க்கமுடியவில்லை.
இந்நிலையில் எஸ்ஏசி தனது 81வது பிறந்தநாளை விஜய் இல்லாமல் தன்னுடைய மனைவி ஷோபா உடன் கேக் வெட்டி கொண்டாடி இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவுகிறது. கூடிய விரைவில் இவர்களுக்கு இடையே இருக்கும் விரிசல் சரியாக வேண்டுமென கோலிவுட் பிரபலங்கள் மட்டுமல்லாமல் ரசிகர்களும் விரும்புகின்றனர்.
சினிமாவில் கொடிகட்டிப் பறக்கும் தளபதி விஜய் தன்னுடைய குடும்பத்தினரிடமும் நேரம் செலவழித்து அவர்களிடம் இருக்கும் பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என அனைவரும் விரும்புகின்றனர்.
80 வயதை கடந்த S A சந்திரசேகர் மனைவியுடன் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு தனியே சென்றுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
80 வயதை நிறைவு செய்த #SAC... திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தாயார் ஷோபா சிறப்பு யாகபூஜை செய்து சாமி தரிசனம் செய்தனர்.#SAC #Vijay #Shoba pic.twitter.com/f2mlCbGGPh
— chettyrajubhai (@chettyrajubhai) July 4, 2022