ரசிகர்கள் ‘RRR படம் ஒரு Gay லவ் ஸ்டோரி.. அதில் ஆல்யா பட்’.. பிரபலத்தின் சர்ச்சை ட்வீட்.. கொந்தளித்த ரசிகர்கள்

Rrr movie commented as gay story by resul pookutty getting viral on social media

பாகுபலி மற்றும் பாகுபலி 2 வுக்கு பின் பெரிய பட்ஜெட்டில் பிரம்மாணட தெலுங்கு பட இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான திரைப்படம் RRR.

Rrr movie commented as gay story by resul pookutty getting viral on social media

இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என 4 மொழிகளில் இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படம் இந்தியாவில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

Rrr movie commented as gay story by resul pookutty getting viral on social media

படத்தில் VFX காட்சிகள், ஆக்ஷன் காட்சிகள், ‘நாட்டு நாட்டு’ என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது. இந்த படம் குறித்து பல மொழி திரையுலக பிரபலங்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

Rrr movie commented as gay story by resul pookutty getting viral on social media

தற்போது ராஜமவுலியின் RRR படம் குறித்து ரசூல் பூக்குட்டி போட்டிருக்கும் ட்வீட் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பி வருகிறது. தென்னிந்திய சினியுலகில் சவுண்ட் டிசைனர், எடிட்டர் மற்றும் ஆடியோ மிக்ஸ்ராகப் பணியாற்றி வருபவர் ரசூல் பூக்குட்டி.

Rrr movie commented as gay story by resul pookutty getting viral on social media

கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர், தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களிலும் பணியாற்றி வருகிறார். கேரள வர்மா பழசி ராஜா என்ற மலையாள படத்திற்காக சிறந்த ஆடியோ கிராபிக்கான தேசிய விருதையும், Slumdog Millionaire என்ற படத்துக்காக சிறந்த சவுண்ட் மிக்ஸிங்கிற்கான ஆஸ்கர் விருதை வென்று இருந்தார். தமிழில் எந்திரன், ரெமோ போன்ற திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.

Rrr movie commented as gay story by resul pookutty getting viral on social media

இந்நிலையில், இவர் ராஜமவுலியின் RRR படத்தை விமர்சித்து போட்டு இருக்கும் ட்வீட் தற்போது சோசியல் மீடியாவில் பேச்சுபொருளாக மாறி இருக்கிறது. இப்படம் குறித்து, ‘RRR படம் தன்பால் ஈர்ப்பாளர்களின் காதல் கதை (gay love story). படத்தின் கதாநாயகியான ஆலியா பட் அதில் ஒரு செட் பிராப்பர்ட்டி போன்று பயன்படுத்தப்பட்டிருக்கிறார்’ என்று விமர்சித்து இருக்கிறார்.

Rrr movie commented as gay story by resul pookutty getting viral on social media

இந்த பதிவு சோசியல் மீடியாவில் வைரல் ஆனதைத் தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் ஒரு ஆஸ்கர் கலைஞர், இப்படி ஒரு கருத்தை எதிர்பார்க்கவில்லை என்றும், பலரும் ரசூல் பூக்குட்டியின் பதிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டனங்களை கூறி வருகின்றனர்.

Rrr movie commented as gay story by resul pookutty getting viral on social media

Rrr movie commented as gay story by resul pookutty getting viral on social media

Share this post