'இப்படிதான் Headline போடுவீங்களா?' பிரபல தமிழ் நாளிதழை விளாசிய RJ பாலாஜி ! வைரலாகும் வீடியோ

Rj balaji tweets about popular magazine headline on his speech

RJ, காமெடியன், இயக்குனர், கிரிக்கெட் கமெண்டேட்டர், நடிகர், தொகுப்பாளர் போன்ற பல அவதாரத்தில் திரையுலகில் வலம் வருபவர் RJ பாலாஜி. 92.7 பிக் FM என்னும் ரேடியோ சேனலில் பணியாற்றியதன் மூலம் பிரபலம் அடைந்தவர்.

அதனைத் தொடர்ந்து, நைட் ஷோ வித் RJ பாலாஜி, டேக் இட் ஈஸி, க்ராஸ் டாக் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்கள் மனதில் நல்ல இடத்தை பிடித்தார்.

Rj balaji tweets about popular magazine headline on his speech

இதன் பின்னர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த பாலாஜி, தீயா வேலை செய்யணும் குமாரு, வடகறி, நானும் ரவுடி தான், புகழ், வாயை மூடி பேசவும், காற்று வெளியிடை, வேலைக்காரன் போன்ற பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

நயன்தாரா நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் படத்தில் இயக்குனராக அறிமுகமானார்.

Rj balaji tweets about popular magazine headline on his speech

மேலும், ஜல்லிக்கட்டு போராட்டம், வெள்ளம் போன்ற பிரச்சனைகளின் போது மக்கள் சார்பில் ஆதாரவு குரல் கொடுத்து தோள் கொடுத்து நின்றவர். இவரது பேச்சு மக்களால் மிகுதியாக ரசிக்கப்பட்டு வருகிறது.

இதனால், காலேஜ், மீட்டிங் போன்ற இடங்களில் சிறப்பு பேச்சாளராக இவரை வரவழைத்து வருகின்ற்னர். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன், கல்லூரி நிகழ்ச்சிகளில் இவர் பேசிய பேச்சு செம வைரல் ஆகி வருகிறது.

Rj balaji tweets about popular magazine headline on his speech

கல்லூரிகளில் ஆண் - பெண் பேசக்கூடாது என விதிமுறைகள் போடுவதனால், மாணவர்கள் வேலைக்கு வரும் போது இதன் மூலம் பெரும் சிக்கலை சந்திக்கின்றனர்.

ரஜினியின் ஒரு சில படங்களில் வெளிநாடு சென்று வருபவரை வில்லியாகவும், வீட்டில் இருப்பவரை ஹீரோயினாகவும் காட்டுவதாக குறிப்பிட்டிருந்தார்.

Rj balaji tweets about popular magazine headline on his speech

என்ன தான் ரஜினி ரசிகனாக இருந்தாலும், இதனை ஆதரிக்க மாட்டேன் என அவர் கூறவே, ரஜினி படங்களை இந்த வகையில் விமர்சித்து பேசுவதா என சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

அதற்கு பதிலளித்துள்ள பாலாஜி, நான் எவ்வளவோ நல்ல விஷயங்களை பேசினேன். ஆனால், இதுதான் உங்களுக்கு தலைப்பாக தென்பட்டதா என பதிவிட்டுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் பேச்சு பொருளாக மாறியுள்ளது.

Rj balaji tweets about popular magazine headline on his speech

Share this post