DDயின் வளைகாப்பு ஃபோட்டோஸ்.. இணையத்தில் வைரல்.. என்னடா சொல்றீங்க ?

Dd pregnant pics viral on social media

ஒரு தொகுப்பாளினி ஹீரோயின் ரேஞ்சுக்கு வரவேற்பும் பிரபலமும் கிடைக்கிறது என்றால் அது நம்ம DDக்கு தான். விஜய் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வந்த இவர், சில திரைப்படங்களிலும் சின்னத்திரை சீரியல் தொடர்களிலும் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Dd pregnant pics viral on social media

ஆனால், விஜய் டிவியில் ஜோடி நம்பர் 1, காபி வித் டிடி, ஹோம் ஸ்வீட் ஹோம் போன்ற நிகழ்ச்சிகள் இவரது புகழ் பெற்றவை. இவருக்கு நிறைய ஹீரோயின் திரைப்பட வாய்ப்புகள் வந்தும் கூட அதை ஏற்காமல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது, பிரபலங்களை பேட்டி காண்பது என இருந்து வருகிறார்.

Dd pregnant pics viral on social media

இந்நிலையில், கடந்த 2014ம் ஆண்டு தனது நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். அதன் பின்னர், பா. பாண்டி, கௌதம் மேனன் இயக்கத்தில் ஜோஷ்வா இமை போல் காக்க போன்ற திரைப்படங்களில் டிடி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

Dd pregnant pics viral on social media

தற்போது குஷ்பூவின் Avni Cinemax தயாரிப்பில், சுந்த சி இயக்கும் புதிய படத்திலும் நடித்து வருகிறார். இதில், பிக் பாஸ் சம்யுக்தா, ஐஸ்வர்யா தத்தா, ரைசா வில்லியம்ஸ், அம்ரிதா அய்யர், ஜீவா, ஜெய் மற்றும் ஸ்ரீகாந்த் என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடிக்கின்றனர்.

Dd pregnant pics viral on social media

இந்நிலையில் டிடியின் கர்ப்பமான புகைப்படம் வெளியாகி உள்ளது. சுந்தர் சி இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்தில் டிடி கர்ப்பமான வயிறுடன் வளைகாப்பு போடும் காட்சி எடுக்கப்பட்டுள்ளது. இந்த காட்சியின் BTS புகைப்படங்கள் தான் தற்போது நடிகர் விச்சு சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

Dd pregnant pics viral on social media

Share this post